ஃபீஃபா: யு.கே. வீரர்கள் ஹோட்டலில் நிர்வாண பெண்- கவனம் சிதறிவிடுமோ என பதறிய ரசிகர்கள்
ரியோடி ஜெனிரோ: உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் இங்கிலாந்து அணி தங்கியிருக்கும் ஹோட்டலில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக வந்து பால்கனியில் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு விளையாடும் இங்கிலாந்து அணி எந்தவித கவனச் சிதறலும் இன்றி இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து விரும்புகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர்கள் ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள ராயல் டுளிப் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக வந்து அவரதை அறையின் பால்கனியில் நின்றார். அவரை பார்க்க ஹோட்டல் முன்பு பெரும் கூட்டம் கூடிவிட்டது.
ஆனால் அவரோ இத்தனை பேர் தன்னை பார்க்கிறார்களே, தான் நிர்வாணமாக நிற்கிறோமே என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நின்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவரே அறைக்குள் சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்த போது இங்கிலாந்து அணி வீரர்கள் ரியோவில் உள்ள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்படி இருந்தும் இங்கிலாந்து ரசிகர்கள் பதறிவிட்டனர். இந்த பெண் இப்படி நிர்வாணமாக நின்று வீரர்களின் கவனத்தை சிதறடித்துவிடுவாரோ என்று ரசிகர்கள் கலங்கிவிட்டனர்.
இங்கிலாந்து அணி முதல் போட்டியில் இத்தாலியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் அந்த அணி இன்று உருகுவே அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications