Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி

டெல்லி: உலக ஊக்கமருத்து தடுப்பு முகமை நர்சிங் யாதவின் தடையை நீக்கியதை அடுத்து அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் நர்சிங் யாதவை இடைநீக்கம் செய்து இருந்தது.

Narsingh Yadav cleared to compete at Rio 2016 Olympics

இது குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் நர்சிங் யாதவ் ஆஜராகி மூன்று மணி நேரம் விளக்கம் அளித்தார். இதனையடுத்து நர்சிங் யாதவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதால், ரியோ ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்த விவகாரம் குறித்து மேல்முறையீடு செய்துள்ளது. எனவே நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் நர்சிங் யாதவ்-க்கு எதிராக உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து ரியோ ஒலிம்பிக்கில் நர்சிங் யாதவ் போட்டியிட தகுதியானவர் என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து இன்று நடக்கயிருக்கும் மல்யுத்த போட்டியில் பிரான்ஸ் நாட்டின் செலிம்கான் காட்ஜிவ் உடன் 74 கிலோ கிராம் பிரீ ஸ்டைல் போட்டியில் மோதயிருக்கிறார்.

Story first published: Friday, August 19, 2016, 1:49 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+