ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிக்கும் தனித் தனி கேப்டன்: சித்து கருத்து
டெல்லி: 50 ஓவர், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு தனித் தனி கேப்டன் நியமிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சித்து, கேப்டன் டோணி ஆல் இன் ஒன்னாக இருக்கிறார். 20 ஓவர், 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என்பவை பாப், ராக் மற்றும் கிளாசிக்கல் மியூசிக் போன்றவை.

20 ஓவர் போட்டிகள் என்பது 50 ஓவர் போட்டியில் இருந்து வேறுபட்டது. 50 ஓவர் போட்டி என்பது டெஸ்ட் போட்டியில் இருந்து வேறுபட்டது என்றார்.
இதன் மூலம் 20 ஓவர், 50 ஓவர்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித் தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்கு சித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
Story first published: Friday, January 24, 2014, 15:08 [IST]
Other articles published on Jan 24, 2014


Click it and Unblock the Notifications