Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ காட்.. 3 கூடைப்பந்து வீரர்களுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் அமெரிக்கா!

சர்வதேச கூடைப்பந்து வீரர் கிறிஸ்டியன் வுட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் இவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்த நிலையில் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கூடைப்பந்து கழகத்தின் அனைத்துப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

NBA Player Christian Wood Tests Positive For Coronavirus

உதா ஜாஸ் அணியின் இரண்டு வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் இந்த அணிக்கு எதிராக டெட்ராய்ட் பிஸ்டன்ஸ் அணி சார்பில் கிறிஸ்டியன் வுட் போட்டியிட்டு விளையாடிய நிலையில் தற்போது அவருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

சர்வதேச கூடைப்பந்து கழகத்தின் சார்பில் விளையாடிவரும் 3 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெட்ராய்ட் பிஸ்டன்ஸ் அணி சார்பில் விளையாடிவரும் கிறிஸ்டியன் வுட் தற்போது கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார். கடந்த வாரத்தில் இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு COVIC -19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்டியன் வுட், தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெட்ராய்ட் பிஸ்டன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை டெட்ராய்ட் பிஸ்டன்ஸ் அணிக்கும் உதா ஜாஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் 32 புள்ளிகளை கிறிஸ்டியன் வுட் பெற்றிருந்தார். இதுவே இவரது கேரியரின் மிகச்சிறந்த சாதனையாக கருதப்படுகிறது. அன்று மாலையே அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிலடெல்பியா அணிக்கு எதிராக மோதிய ஆட்டத்தின்போது, வுட்டிற்கு கடுமையான காய்ச்சல் இருந்ததையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக உதா ஜாஸ் அணியின் ரூடி கோபர்ட் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டு, சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அதே அணியை சேர்ந்த தோனோவன் மிச்செல் இரண்டாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் டெட்ராய்ட் பிஸ்டன்ஸ் அணியின் அனைத்து வீரர்கள், ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Story first published: Sunday, March 15, 2020, 14:38 [IST]
Other articles published on Mar 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+