Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீரஜ் சோப்ரா அபாரம்.. ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்று இந்தியா சாதனை.. காமன்வெல்த்தில் கலக்கல்

கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான யஷ்விர் சிங் தனது அபாரமாக செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்ற, ஒரே போட்டியில் இரு இந்திய வீரர்கள் பதக்க மேடை ஏறி சாதனை படைத்துள்ளனர்.

நீரஜ் சோப்ரா தனது சிறந்த முயற்சியாக 85.83 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இலங்கையின் ருமேஷ் பத்திரகே 89.75 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். யஷ்விர் சிங் தனது கடைசி முயற்சியில் 85.41 மீட்டர் தூரம் வீசி, தனது பயணத்தின் சிறந்த செயல்திறனுடன் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

Neeraj chopra

காமன்வெல்த் போட்டிகளின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தனது ஆட்டத்தை சீராகத் தொடங்கினார். முதல் முயற்சியிலேயே அவர் 80.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காமன்வெல்த் இறுதிப் போட்டிக்குத் திரும்பிய ஒலிம்பிக் சாம்பியன், தனது முதல் முயற்சியிலேயே 80 மீட்டர் எல்லையை எளிதாகக் கடந்து திருப்தியுடன் திரும்பினார். இது தங்கம் வெல்வதற்கான முயற்சிக்கு நல்லதொரு அடித்தளமாக அமைந்தது.

காமன்வெல்த் போட்டி 2026: ஜூடோவில் ஒரே இரவில் இந்தியாவுக்கு 3 பதக்கம்

காமன்வெல்த் போட்டி 2026: ஜூடோவில் ஒரே இரவில் இந்தியாவுக்கு 3 பதக்கம்

முதல் சுற்றில் முன்னணி வீரர்கள் பலர் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்க சிரமப்பட்ட நிலையில், நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியில் அசத்தலாக 85.83 மீட்டர் தூரம் வீசி இறுதிப் போட்டிக்கு விறுவிறுப்பைக் கூட்டினார். இந்த முயற்சி அவரை புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு சென்றதுடன், தங்கம் வெல்வதற்கான வாய்ப்பையும் பிரகாசமாக்கியது. ஆனால் இலங்கை வீரர் ரூமேண் அபாரமாக செயல்பட்டு முதலிடத்தை தட்டி சென்றார். இதே போன்று நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தான் வீரர் அர்ஷ்த் 77 மீட்டர் தூரம் வரை வீசி ஏமாற்றம் தந்தார்.

காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியா வெள்ளி, வெண்கலம் கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, 2026 தோஹா டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா நான்காவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 84.03 மீட்டர் தூரம் மட்டுமே வீசி 8-வது இடத்தைப் பிடித்ததன் மூலம் சற்றே சரிவைச் சந்தித்தது.

தொடர்ச்சியாக பங்கேற்ற 26 போட்டிகளில் நீரஜ் சோப்ரா முதல் இரண்டு இடங்களுக்குள் வராமல் போனது அதுவே முதல் முறையாகும். அவரது ஆதிக்கம் நிறைந்த தடகள வாழ்க்கையில் இது ஒரு அரிய சரிவாகப் பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் போட்டி 2026: ஜூடோவில் இந்தியா 2 தங்கம்.. வரலாற்று சாதனை படைத்த அஸ்மிதா,ஹர்ஷ் சிங்

காமன்வெல்த் போட்டி 2026: ஜூடோவில் இந்தியா 2 தங்கம்.. வரலாற்று சாதனை படைத்த அஸ்மிதா,ஹர்ஷ் சிங்

இந்த பின்னடைவு இருந்தபோதிலும், சோப்ராவின் 2025 சீசன் மிகவும் கடுமையான போட்டியுடன், தனித்துவமான சாதனைகள் நிறைந்ததாகவே அமைந்தது. தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த போட்ச் இன்விடேஷனல் போட்டியில் வெற்றியுடன் ஆண்டைத் தொடங்கிய அவர், மே மாதம் நடைபெற்ற தோஹா டைமண்ட் லீக்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த போட்டியில் 90.23 மீட்டர் தூரம் வீசியதன் மூலம், தனது தடகள வாழ்க்கையில் முதன்முறையாக 90 மீட்டர் எல்லையைத் தாண்டி புதிய வரலாறு படைத்தார்.

Story first published: Saturday, August 1, 2026, 2:39 [IST]
Other articles published on Aug 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+