For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைமண்ட் லீக்: 88.44 மீட்டர் தூரம் பாய்ந்த ஈட்டி.. நீரஜ் சோப்ரா வரலாற்று வெற்றி!

சென்னை: டைமண்ட் லீக் தொடரில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கோப்பை வென்று அசத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சல் நகரத்தில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஈட்டி எறிதல் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா களமிறங்கினார்.

Neeraj Chopra Win Diamond League Trophy

இந்த இறுதிப்போட்டியில் தனது முதல் வாய்ப்பிலேயே நீரஜ் சோப்ரா ஃபவுலுடன் தான் தொடங்கினார். ஆனால் மற்ற வீரர்கள் நன்றாக வீசி, நீரஜை முந்தினர். ஆனால் 2வது முயற்சியில் அட்டகாசமான கம்பேக் கொடுத்த நீரஜ் சோப்ரா 88.44 மீ தூரம் எறிந்து சாதனை புரிந்தார். இதனால் டாப் இடத்திற்கும் சென்றார்.

நீரஜ் வீசிய 3வது த்ரோவும் 88 மீ தூரம் மற்றும் 4வது முயற்சியில் 86.1 மீ தூரமே எறிந்ததால், டைமண்ட் லீக் கோப்பையை வென்று அசத்தினார். இந்த மதிப்புமிக்க டயமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் ஜோப்ரா பெற்றார்.

Story first published: Friday, September 9, 2022, 16:08 [IST]
Other articles published on Sep 9, 2022
English summary
Neeraj Chopra Win Diamond League Trophy ( நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் ) டைமண்ட் லீக் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+