கடலில் சீறிப்பாய்ந்து பதக்கம் வென்ற சென்னை பெண்.. பாய்மரப் படகுப் போட்டியில் நேத்ரா குமணன் வெண்கலம்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டு பாய்மரப் படகுப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமணன் வெண்கலப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அனல் பறந்த மகளிர் டிங்கி பிரிவில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய அவர், இந்தியாவிற்கு 3வது பாய்மரப் படகு பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
ஜப்பானின் கமகோரி நகரில் உள்ள கடற்பரப்பில் நடைபெற்ற மகளிர் டிங்கி இறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இரண்டு பந்தயங்கள் கொண்ட இந்த இறுதிச் சுற்றில், முதல் பந்தயத்தில் 6வது இடத்தைப் பிடித்த நேத்ரா குமணன், 2வது மற்றும் கடைசி பந்தயத்தில் அபாரமாக படகை இயக்கி முதலிடத்தைப் பிடித்து அசத்தினார்.

Story first published: Friday, October 2, 2026, 11:13 [IST]
Other articles published on Oct 2, 2026


Click it and Unblock the Notifications
