Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்தை நிலை குலைய வைத்த ஸ்காட்லாந்து "மச்சான்"!

டுனெடின்: நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியன்போது ஸ்காட்லாந்து வீரர்கள், நியூசிலாந்து வீரர்களுக்கு செம டென்ஷனைக் கொடுத்து விட்டனர். அவர்களிடமிருந்து தப்பி மீண்டதே நியூசிலாந்துக்குப் பெரிய கதையாகிப் போய் விட்டது.

ஸ்காட்லாந்து வீரர் மாட் மச்சன், ரிச்சி பெரிங்டன் ஆகிய இருவரும் சேர்ந்து 5 விக்கெட்டுக்கு 97 ரன்களைக் குவித்து ரன் சேர்த்து ஸ்காட்லாந்துக்கு உயிர் கொடுத்தனர். பின்னர் பந்து வீச்சின் மூலம் நியூசிலாந்து வீரர்களுக்கு, ஸ்காட்லாந்து வீரர்கள் நெருக்கடி கொடுத்ததால் நியூசிலாந்து விழி பிதுங்கிப் போய் விட்டது.

ஸ்காட்லாந்து தரப்பில் 2 பேர் அரை சதம் போட்டனர். ஆனால் ஜாம்பவான் நியூசிலாந்து தரப்பில் ஒருவரால் கூட அரை சதம் போட முடியாமல் போனது வினோதம்தான்.

இன்று காலையில் கிரிக்கெட் ரசிகர்களை கலகலப்பாக்கிய இந்தப் போட்டியின் ஹைலைட்ஸ் பார்க்கலாம், வாங்க.

டாஸ் வென்று பீல்டிங்

டாஸ் வென்று பீல்டிங்

நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

நல்லாத்தான் இருந்தது பவுலிங்

நல்லாத்தான் இருந்தது பவுலிங்

நியூசிலாந்தின் பந்து வீச்சும் நன்றாகத்தான் இருந்தது. டிம் செளதீயும், டிரென்ட் போல்ட்டும் சிறப்பாக பந்து வீசினர். முதல் 3 விக்கெட்களையும் அடுத்தடுத்து இருவரும் வீழ்த்தினர். இதனால் ஸ்காட்லாந்து தடுமாறிப் போனது.

வந்தாருய்யா

வந்தாருய்யா "மச்சான்"!

ஆனால் மாட் மச்சனும், தொடர்ந்து பெர்ரிங்டனும் சேர்ந்தபோது ஸ்காட்லாந்து வீரர்கள், சற்றே நியூசிலாந்துக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தனர். இருவரும் நிறுத்தி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் குதித்தனர்.

"மச்சான்" 56

மச்சன் 56 ரன்கள் எடுத்து கோரி ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரது ஸ்கோரில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை மச்சன் மிரட்டி விட்டார்.

பெர்ரிங்டன் 50

பெர்ரிங்டன் 50

மறுபக்கம் பெர்ரிங்டன் 80 பந்துகளைச் சந்தித்து 50 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சிக்ஸரும், 4 பவுண்டரிகளும் அடக்கம். இவர்களைத் தவிர மற்றவர்கள் சரிவர ஆடவில்லை. இதனால் 36.2 ஓவர்களில் ஸ்காட்லாந்து 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

5வது வி்க்கெட்டுக்கு

5வது வி்க்கெட்டுக்கு

5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மச்சனும், பெர்ரிங்டனும் சேர்ந்து 97 ரன்களைச் சேர்த்ததுதான் ஸ்காட்லாந்துக்கு சற்றே உயிர் கொடுத்தது. நியூசிலாந்தை ரொம்பவே சோதித்து விட்டது இந்த இணை.

கோரி வந்து முடித்தார்

கோரி வந்து முடித்தார்

இவர்களைப் பிரிக்க கேப்டன் மெக்கல்லம் நிறையவே முயற்சித்தார். கடைசியில் கோரி ஆண்டர்சன் வந்துதான் கதையை முடித்தார். மச்சன், பெர்ரிங்டன் இருவரையும் கோரி அவுட்டாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழசு பழசுதான்

பழசு பழசுதான்

பழம்பெரும் வீரரான டேணியல் வெட்டோரி தன்னிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது என்பதை இப்போட்டியில் நிரூபித்தார். கடைசி இரண்டு விக்கெட்களை டக் அவுட் ஆக்கினார் வெட்டோரி. அடுத்த போட்டியில் தனது முதல் பந்தில் ஒரு விக்கெட்டை வெட்டோரி வீழ்த்தினால் அது அவருக்கு ஹாட்ரிக் ஆகும்.

மொத்தம் 5 முட்டை

மொத்தம் 5 முட்டை

ஸ்காட்லாந்து அணியில் மொத்தம் 5 பேர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆயினர்.

திருப்பி அடிச்ச ஸ்காட்ஸ்

திருப்பி அடிச்ச ஸ்காட்ஸ்

பின்னர் ஸ்காட்லாந்து பவுலிங் செய்தபோது பந்து வீச்சில் உண்மையிலேயே மிரட்டி விட்டனர்.

எம்புட்டுக் கஷ்டம்

எம்புட்டுக் கஷ்டம்

நியூசிலாந்து வீரர்களை ரொம்பவே சோதித்து விட்டனர் ஸ்காட் பந்து வீச்சாளர்கள். அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது, நியூசிலாந்து வீரர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பயமுறுத்தி விட்டது.

நல்ல லென்த்

நல்ல லென்த்

ஸ்காட்லாந்து பவுலர்கள் நல்ல லென்த்தில், அருமையாக பந்து வீசினர். ஒரு கட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி விடுவார்களோ என்று கூட நிலைமை இருந்தது. இருப்பினும் அந்த மோசமான நிலையிலிருந்து நியூசிலாந்து மீண்டு வந்து விட்டது.

ஒரு அரை சதம் கூட இல்லை

ஒரு அரை சதம் கூட இல்லை

ஸ்காட்லாந்து தரப்பி்ல் 2 பேர் அரை சதம் போட்டனர். ஆனால் நியூசிலாந்து தரப்பிலோ ஒருவர் கூட அரை சதம் போட முடியாமல் போனது ஆச்சரியம்தான். அதிகபட்சம் கனே வில்லியம்சன் 38 ரன்கள் எடுத்தார்.

Story first published: Monday, October 12, 2015, 16:59 [IST]
Other articles published on Oct 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+