Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன் காதலி ஓடிப் போயிட்டா... வாவ்ரிங்காவைப் பார்த்து ஆபாசமாகப் பேசிய டென்னிஸ் வீரருக்கு அபராதம்

டோரன்டோ: சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவைப் பார்த்து ஆபாசமாகப் பேசி அநாகரீகமாக நடந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸுக்கு 10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனது செயலுக்காக தற்போது கிர்ஜியோஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் வாவ்ரிங்காதான் சமாதானம் ஆவதாக இல்லை. கோபத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்.

மான்ட்ரீல் நகரில் நடந்த ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் 2வது சுற்று ஆட்டத்தில்தான் இந்த களேபரம் நடந்தது. அப்போட்டியில் வாவ்ரிங்காவும், கிர்ஜியோஸும் மோதினர்.

அநாகரீகப் பேச்சு

அநாகரீகப் பேச்சு

போட்டியின்போது வாவ்ரிங்கா சிறப்பாக ஆடியதால் பதட்டமடைந்த கிர்ஜியோஸ், வாவ்ரிங்காவை நோக்கி ஏதோ பேசினார். இது வாவ்ரிங்கா காதில் சரியாக விழவில்லை. இதையடுத்து கிர்ஜியோஸ், வாவ்ரிங்காவை நெருங்கி மீண்டும் கூறவே வாவ்ரிங்கா முகம் மாறிப் போனது.

பாதியிலேயே வெளியேறினார்

பாதியிலேயே வெளியேறினார்

இந்த நிலையில் காயம் காரணமாகவும், கிர்ஜியோஸ் பேச்சு காரணமாகவும் போட்டியின் பாதியிலேயே வெளியேறினார் வாவ்ரிங்கா. இதையடுத்து கிர்ஜியோஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

நடுவரிடம் புகார்

நடுவரிடம் புகார்

போட்டி முடிந்த பின்னர் வாவ்ரிங்கா, கிர்ஜியோஸ் மீது போட்டி நடுவரிடம் புகார் கொடுத்தார். அதன் பிறகு சம்பவ இடத்தில் இருந்த மைக்ரோபோன் பதிவை நடுவர்கள் போட்டுக் கேட்டனர். அப்போதுதான் கிர்ஜியோஸ் சொன்னது தெரிய வந்தது.

உன் காதலி ஓடிப் போயிட்டா

உன் காதலி ஓடிப் போயிட்டா

வாவ்ரிங்காவை நெருங்கிய கிர்ஜியோஸ், உன் காதலி, தனாசி கோக்கினக்கீஸுடன் போய் விட்டாள். இதைச் சொல்வதற்காக என்னிடம் கோபப்படாதே, வருத்தப்படாதே என்று கூறியுள்ளார் கிர்ஜியோஸ். இதனால்தான் வாவ்ரிங்கா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலிய வீரர்

தனாசி கோக்கினக்கீஸும் ஆஸ்திரேலிய வீரர்தான். அவரைத்தான், வாவ்ரிங்காவின் காதலியான டோனா வேகிக்கைப் பற்றித்தான் இப்படி அவதூறாகப் பேசியுள்ளார் கிர்ஜியோஸ்.

இணைந்து ஆடியவர்கள்

இணைந்து ஆடியவர்கள்

கோக்கினக்கீஸும், வேகிக்கும், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்து ஆடியவர்கள் ஆவர். தற்போது வாவ்ரிங்காவை வேகிக் காதலித்து வருகிறார்.

மனைவியை விவாகரத்து செய்த வாவ்ரிங்கா

மனைவியை விவாகரத்து செய்த வாவ்ரிங்கா

இந்த ஆண்டுதான் வாவ்ரிங்கா தனது மனைவியை விவாகரத்து செய்திருந்தார். அதன் பின்னர்தான் வேகிக்குடன் நெருங்கிப் பழகி வருகிறார். இந்த நிலையில் போட்டியின்போது வேகிக் குறித்துப் பேசி வாவ்ரிங்காவை டென்ஷனாக்கி விட்டார் கிர்ஜியோஸ்.

10,000 அபராதம்

10,000 அபராதம்

வாவ்ரிங்கா கொடுத்த புகாரைப் பரிசீலித்த போட்டி அமைப்பாளர்கள், தற்போது கிர்ஜியோஸுக்கு 10,000 டாலர் அபராதம் விதித்துள்ளனர். அவர் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

Story first published: Friday, August 14, 2015, 15:48 [IST]
Other articles published on Aug 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+