யாரு ஃபிட்டுன்னு பார்ப்போமா? ஒலிம்பிக் வீரரை மிரள வைத்த இன்ஸ்டாகிராம் மாடல்!
நியூயார்க் : ஒலிம்பிக் வீரருடன் இன்ஸ்டாகிராம் மாடல் ஒருவர் உடற்பயிற்சி செய்வதில் மோதினால்.. யார் ஜெயிப்பார்கள்?
Recommended Video
அப்படி ஒரு ஒலிம்பிக் வீரர் - இன்ஸ்டாகிராம் மாடல் போட்டி போடும் ஒரு யூட்யூப் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
ஒலிம்பிக் வீரர் தான் வெல்வார் என நினைத்த பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி வியப்பை ஏற்படுத்தி உள்ளார் அந்த இன்ஸ்டாகிராம் மாடல்.

நிக் சிம்மண்ட்ஸ்
அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் நிக் சிம்மண்ட்ஸ் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உடற்பயிற்சி சார்ந்த வீடியோக்களை அவர் ஒளிபரப்பி வருகிறார். அதில் தான் இன்ஸ்டாகிராம் மாடல் ஒருவருடன் தான் போட்டி போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கிளேர் பி தாமஸ்
கிளேர் பி தாமஸ் என்ற இன்ஸ்டாகிராம் மாடல் ஒரு விளையாட்டு வீராங்கனையும் ஆவார். அவர் உடலை கட்டுக் கோப்பாக வைத்து இருப்பவர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 7.7 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

தோல்வி அடைந்தால் குதிரை
இவர்கள் இருவருக்கும் இடையே ஆன உடற்பயிற்சி போட்டியில் கடுமையான உடற்பயிற்சிகளை இருவரும் செய்தனர். அதில் ஒவ்வொரு தோல்விக்கும் "HORSE" (குதிரை) என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்துக்கள் அளிக்கப்படும். யார் ஐந்து தோல்விகளை முதலில் அடைந்து குதிரை ஆகிறார்கள் என்பதே போட்டி.

யாருக்கு வெற்றி?
இதில் புல் அப்ஸ், ரோப் கிளைம்பிங், ஓட்டப் பந்தயம் என பல்வேறு உடற்பயிற்சிகளை இருவரும் செய்தனர். நிக் சிம்மண்ட்ஸ் 5 தோல்விகளையும், கிளேர் மூன்று தோல்விகளையும் சந்தித்தனர். மாடலான கிளேர் வெற்றி பெற்றார்.


Click it and Unblock the Notifications