ஊக்க மருந்து-நைஜீரிய வீராங்கனை தங்கப் பதக்கம் பறிப்பு?
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான 100 மீ ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நைஜீரிய வீராங்கனை ஓசாயெமி ஓலுடாமோலா, ஊக்கமருந்தை உட்கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆணையத்தின் தலைவர் மைக்கேல் ஃபென்னல் இன்று காலையில் அறிவித்தார். மெத்திலாக்சானீமைன் என்கிற தடை செய்யப்பட்ட மருந்தை ஓலுடாமோலா உட்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஓலுடாமோலாவுக்கு இன்று பிற்பகல் "பி" சாம்பிள் சோதனையும் நடத்தப்பட்டது. அதிலும் அவர் போதை மருந்து உபயோகித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படுமா என்பது குறித்து போட்ட அமைப்பாளர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
"இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவருக்குத் தாற்காலிக தடை மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது"என்று பதிலளித்தார் மைக்கேல் ஃபென்னல்.
பெண்களுக்கான 100 மீ போட்டியில் முதலாவதாக வந்த ஆஸ்திரேலிய வீராங்கனை சாலி பியர்சன், தவறாக ஓடத் தொடங்கியதால் அந்தப் போட்டியில் இரண்டாவதாக வந்த ஓலுடாமோலாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications