For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"46 நொடி" மார்க்கை காலி செய்த.. நார்வே வீரர் கார்ஸ்டென்.. 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில் உலக சாதனை!

டோக்கியோ: ஆண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 45.94 நொடிகளில் இலக்கை அடைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

2020 ஒலிம்பிக் தொடரில் பல்வேறு உலக சாதனைகள் மற்றும் ஒலிம்பிக் சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த நாட்களில் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன்பு 100மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் 3 பதக்கங்களையும் அள்ளி ஜமைக்கா நாடு சாதனை படைத்தது.

ஜமைக்காவின் எலைன் தாம்ப்சன் ஹெரா முதல் இடம் பிடித்தார். 10.61 நொடிகளில் இவர் 100 மீட்டரை கடந்தார். இதன் மூலம் இரண்டாவது வேகமான பெண் ஓட்டப்பந்தய வீரர் என்ற சாதனையை அடைந்துள்ளார்.

சாதனை

சாதனை

1988 அமெரிக்காவின் புளோரன்ஸ் க்ரிப்த் 10.61 நொடியில் 100 மீட்டரை கடந்த நிலையில், ஜமைக்காவின் எலைன் தாம்ப்சன் ஹெரா அதே சாதனையை 33 வருடங்களுக்கு பின் சமன் செய்துள்ளார். ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி ஆன் பிரஷர் 10.74 நொடிகளில் இலக்கை அடைந்து 2வது இடம் பிடித்தார். இன்னொரு பக்கம் ஜமைக்காவின் ஷெரிகா ஜாக்சன் 10.76 நொடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தற்போது ஆண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இன்னொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

புதிய உலக சாதனை

புதிய உலக சாதனை

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 45.94 நொடிகளில் இலக்கை அடைந்துள்ளார். உலகிலேயே 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 46 நொடிக்கும் குறைவாக இலக்கை அடைந்த ஒரே நபர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். தன்னுடைய முந்தைய உலக ரெக்கார்டை ஒரே மாதத்தில் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் முறியடித்துள்ளார்.

எப்படி?

எப்படி?

இதற்கு முன் இதே 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 46.7 என்ற சாதனையை கடந்த மாதம் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் படைத்து இருந்தார். இதை இன்று 0.76 நொடிகள் வித்தியாசத்தில் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் முறியடித்துள்ளார். இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் பிடித்தார். இதில் சுவாரசியமான விஷயம் அவரும் கார்ஸ்டென் வார்ம்ஹோல்மின் கடந்த மாத ரெக்கார்டை முறியடித்துள்ளார்.

முறியடிப்பு

முறியடிப்பு

ஆம், அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் 46.17 நொடிகளில் கடந்து 2ம் இடம் பிடித்துள்ளார். இந்த புதிய உலக சாதனை மூலம் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வாங்கி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நான் இந்த சாதனையை முறியடிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. என்னுடைய பயிற்சிகளின் போது 46 நொடி என்ற மார்க்கை விட குறைவாக ஓட முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

ஊக்கம்

ஊக்கம்

என்னுடைய பயிற்சியாளர்கள் எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தனர். முறையாக கவனம் செலுத்தி, சிறப்பாக ஓடினால் 46 நொடிக்கு முன்பாக இலக்கை அடைய முடியும் என்று கூறினார்கள். ஆனால் இதை களத்தில் செய்வது மிகவும் கடினம். இதை நினைத்து பார்க்கவே மலைப்பாக இருந்தது. நான் கனவில் கூட இந்த மார்க்கை முறியடித்து, 46 நொடிக்கு முன்பாக இலக்கை அடைவேன் என்று நினைக்கவில்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.

பழைய சாதனை

பழைய சாதனை

1992ல் கடைசியாக ஒலிம்பிக் போட்டியில் 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்காவின் கெவின் யங்க் 46.78 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். கடந்த ஜூன் மாதம் வரை இதுவே உலக சாதனையாக இருந்தது. இதை கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் கடந்த மாதம் முறியடித்தார். தற்போது மீண்டும் தன்னுடைய சாதனையை முறியடுத்ததோடு 46 நொடிக்குள் இலக்கை அடைந்துள்ளார்.

வியத்தகு சாதனை

வியத்தகு சாதனை

இந்த சாதனை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், சாதாரண 400மீ ஓட்டத்திலேயே உலக சாதனை என்பது 43.03 நொடிகள்தான். இப்படி இருக்கும்போது தடை தாண்டும் ஓட்டத்தில், அதே 400மீ தூரத்தை 10 தடைகளுடன் 45.94 நொடிகளில் கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் கடந்துள்ளார். சாதாரண 400மீ ஓட்டத்தை விட 2.91 நொடிகள் மட்டுமே தடை தாண்டும் கூடுதலாக நேரம் எடுத்துள்ளார் என்பதால் இந்த சாதனை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. காலம் செல்ல செல்ல மனிதர்களின் உடல் திறனும், வேகமும், ஆற்றலும் அதிகமாகிக்கொண்டு வருவதாக பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன.. அதை கார்ஸ்டென் வார்ம்ஹோல்ம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்து உள்ளார்.

Story first published: Tuesday, August 3, 2021, 13:50 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
Olympics 2020 Athletics: Norway's Karsten Warholm breaks 46 seconds mark and creates new World record in 400m hurdles today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+