Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடந்த வேல்ட் கப்பில் கடைசி பந்தை வீசிய பவுலரே இந்த உலக கோப்பையின் முதல் பந்தை வீசிய ஆச்சரியம்!

கிறைஸ்ட்சர்ச்: கடந்த உலக கோப்பையில் கடைசி பந்தை வீசிய நுவான் குலசேகரா, இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசினார்.

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் நடந்தது. இந்தியா-இலங்கை மோதின. இரண்டாவது பேட்டிங் செய்த இந்தியா 48.2வது ஓவரில் டோணியின் இமாலய சிக்சருடன் வெற்றிக் கனியை பறித்தது. அந்த ஓவரை வீசியது இலங்கை மிதவேக பந்து வீச்சாளர் குலசேகராவாகும். ஆக.. கடந்த உலக கோப்பையின் கடைசி பந்தை குலசேகரா வீசியதாக வரலாறு பதிவு செய்தது.

Nuwan kulasekara: Last and first ball record

இந்நிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இன்று தொடங்கின. முதல் போட்டியில் இலங்கை-நியூசிலாந்து மோதின. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஓவரை குலசேகரா வீசினார். இதன் மூலம், கடந்த உலக கோப்பையின் கடைசி பந்தையும், இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசிய பெருமையை குலசேகரா யதேர்ச்சையாக பெற்றுள்ளார்.

போன ஜென்ம பந்தம் என்பதை போல போன உலக கோப்பை தொடர்ச்சி போலும் இது..

Story first published: Saturday, February 14, 2015, 10:07 [IST]
Other articles published on Feb 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+