For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"ஜிம்னாஸ்டிக்" ப்ரனிதி தோல்வி அடைந்தது எப்படி?.. கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட கோச்.. என்ன நடந்தது?

டோக்கியோ: இன்று ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியாவின் ப்ரனிதி நாயக் தோல்வி அடைந்ததற்கு அவரின் பயிற்சியாளர் கடைசி கட்டத்தில் மாற்றப்பட்டதுதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ப்ரனிதி நாயக் இன்று நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார். ஜிம்னாஸ்டிக்கின் Floor, Vault, Uneven bars, Balance beam பிரிவுகளில் வெறும் 42.565 புள்ளிகளை ப்ரனிதி பெற்றார்.

இதனால் 12வது இடம் பிடித்த ப்ரனிதி தகுதி சுற்று போட்டியில் தோல்வி அடைந்தார். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் தொடரில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட ஒரே வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம்

காரணம்

இந்த நிலையில் ப்ரனிதி நாயக் தோல்வி அடைந்ததற்கு அவரின் பயிற்சியாளர் கடைசி கட்டத்தில் மாற்றியதுதான் காரணம் என்கிறார்கள். ப்ரனிதி நாயக் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான போது, அவரின் பயிற்சியாளர் குழு மாற்றப்பட்டது. 18 வருடமாக ப்ரனிதி பயிற்சி பெற்று வந்த மினாரி பேகம் பயிற்சியாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

மாற்றம்

மாற்றம்

ப்ரனிதிக்கு எட்டு வயதாக இருக்கும் போதில் இருந்து மினாரிதான் அவருக்கு பயிற்சி கொடுத்து வந்தார். ஆனால் ஒலிம்பிக் கமிட்டி இவரை டோக்கியோ அனுப்பாமல் புதிய பயிற்சியாளர் ஒருவரை டோக்கியோ அனுப்பியது. வெறும் 27 வயதே நிரம்பிய பயிற்சியாளர் ஒருவரை 26 வயது நிரம்பிய ப்ரனிதிக்கு பயிற்சி கொடுக்க அனுப்பினார்கள்.

 கடைசியில் திருப்பம்

கடைசியில் திருப்பம்

கடைசி கட்டத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்று தெளிவாக தெரியவில்லை. ப்ரனிதி தனது கோச்சை மாற்ற வேண்டும் என்று கூறியதாக ஒரு பக்கம் செய்திகள் வருகிறது. இன்னொரு பக்கம் இளம் ஆண் ஒருவரை பயிற்சியாளராக அனுப்ப வேண்டும் என்பதால் ஒலிம்பிக் கமிட்டிதான் பயிற்சியாளரை மாற்றும் முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

காரணம்

காரணம்

அதே சமயம் மாவட்ட அளவில் கூட பெரிய அளவில் போட்டிகளில் கலந்து கொள்ளாத நபரை பயிற்சியாளராக நியமித்தது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதோடு ப்ரனிதி சிறு வயதில் மாவட்ட அளவிலான போட்டிகளில் திணறிய போது பயிற்சியாளர் மினாரிதான் போதுமான வாய்ப்புகளை ப்ரனிதிக்கு வழங்கினார்.

மோசமான முடிவு

மோசமான முடிவு

இப்படிப்பட்ட ஒருவரை கடைசி கட்டத்தில் நீக்கியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். 18 வருடமாக ப்ரனிதிக்கு பயிற்சி கொடுத்தவரை நீங்கியதால் இன்று அவரின் ஆட்டமும் மிக மோசமாக அமைந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ப்ரனிதி இன்று தோல்வி அடையவும் கூட பயிற்சியாளர் மாற்றமே காரணமாக பார்க்கப்படுகிறது

Story first published: Sunday, July 25, 2021, 17:21 [IST]
Other articles published on Jul 25, 2021
English summary
Olympic 2020: The coach changed at the last moment, What is the reason behind Pranati Nayak's defeat in gymnastics today?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+