ஒலிம்பிக்.. பெண்கள் ஹாக்கி காலிறுதி முதல் துப்பாக்கி சுடுதல் வரை.. இந்தியா இன்று ஆடும் ஆட்டங்கள்
டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் ஹாக்கி காலிறுதி உட்பட பல முக்கியமான ஆட்டங்களில் இன்று இந்திய அணி வீரர் வீராங்கனைகள் ஆட உள்ளனர்.
Recommended Video
Tokyo Olympics : Indian Women Hockey Team Beats Australia and Qualifies to Semi Finals
2020 ஒலிம்பிக் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்திய அணி இதுவரை பளு தூக்குதலில் ஒரு வெள்ளி, பாட்மின்டனில் ஒரு வெண்கலம் வாங்கி உள்ளது. இந்தியாவிற்காக மீராபாய் சானு மற்றும் பிவி சிந்து பதக்கம் வென்று உள்ளனர்.
அதேபோல் நேற்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 வருடம் கழித்து ஒலிம்பிக் ஹாக்கியில் செமி பைனலுக்கு நுழைகிறது. இதன் மூலம் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணிக்கு ஒரு பதக்கம் உறுதி ஆகியுள்ளது. இந்த நிலையில்தான் இன்று முக்கியமான பல போட்டிகள், ஆட்டங்கள் நடக்க உள்ளன.
இன்று நடக்க உள்ள ஆட்டங்கள் விவரம்:

தடகளம்
- பெண்கள் 200m ஓட்டம் - சுற்று 1 ஹீட் 4: டூட்டி சந்த், காலை 07:24 AM
- பெண்கள் 200m ஓட்டம் - செமி பைனல் 1: டூட்டி சந்த் ( தகுதி பெற்றால்), மாலை 3:55 PM
- பெண்கள் வட்டு எறிதல் - பைனல்ஸ்: காமல்ப்ரீத் கார், மாலை 04:30 PM

குதிரை போட்டி
- குதிரை தாண்டுதல் - தகுதி சுற்று: பவுத் மிர்சா, பிற்பகல் 1:30 PM
- குதிரை தாண்டுதல் - இறுதி சுற்று: பவுத் மிர்சா (தகுதி பெற்றால்), மாலை 5:15 PM

ஹாக்கி
பெண்கள் காலிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா , காலை 8:30 AM

துப்பாக்கி சுடுதல்
- 50m 3 பொஷிஷன் ஆண்கள் துப்பாக்கி சூடு - தகுதி சுற்று:ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சஞ்சீவ் ராஜ்புட், காலை 8:00 AM
- 50m 3 பொஷிஷன் ஆண்கள் துப்பாக்கி சூடு - இறுதிச்சுற்று (தகுதி பெற்றால்) பிற்பகல் 1:20 PM.
Story first published: Monday, August 2, 2021, 10:56 [IST]
Other articles published on Aug 2, 2021


Click it and Unblock the Notifications