டோக்கியோ ஒலிம்பிக் 2020.. கோல்ப் முதல் மல்யுத்தம் வரை.. இந்தியா இன்று ஆட உள்ள போட்டிகளின் விவரம்
டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று மூன்று முக்கியமான ஆட்டங்கள் ஆட உள்ளது.
2020 ஒலிம்பிக் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. கடைசி இரண்டு நாள் ஆட்டங்கள் மட்டுமே உள்ளது. நேற்று இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியிடம் 5:4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஏற்கனவே வெண்கல பதக்கம் வென்றுவிட்டது. நேற்று நடந்த மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா செமி பைனலில் தோல்வி அடைந்தார். அதேபோல் நேற்று மல்யுத்தத்தின் பெண்கள் 50kg ஆட்டம் 1/8 பைனல் ஆட்டத்தில் இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.
இந்த நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று ஆட உள்ள போட்டிகள் விவரம்:
கோல்ப்
பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் 4 - திக்சா டகார்
பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் 4 - அதிதி அசோக்
மல்யுத்தம்
ஆண்கள் 65kg வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் - பஜ்ரங் புனியா, மாலை 3:55 மணிக்கு
தடகளம்
ஆண்கள் ஈட்டி எறிதல் பைனல் - நீரஜ் சோப்ரா, மாலை 04:30 மணிக்கு


Click it and Unblock the Notifications