Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2020 ஒலிம்பிக் புள்ளிகள் பட்டியல்.. 6 தங்கத்தோடு சீனா முதலிடம்.. 24வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் புள்ளிகள் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. ஒரே ஒரு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள இந்தியா 24வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது.

ஒலிம்பிக் 2020 ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எல்லா வருடமும் போல இந்த முறையும் ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அதேபோல் இந்த முறை தென் கொரியாவும் தனி நபர் ஆட்டங்கள், வில்வித்தை போன்றவற்றில் சிறப்பாக விளையாடி வருகிறது. ரஷ்ய அணி தடை செய்யப்பட்டதால் ரஷ்ய வீரர்கள் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி என்ற பெயரில் அந்நாட்டு கொடி இல்லாமல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளனர்.

Olympic 2020: India goes down to 24 in medal tally, China on the top with 6 golds

இந்த முறையும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா சரியாக ஆடவில்லை. டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், வில்வித்தை பிரிவுகளில் மட்டுமே இந்தியா கொஞ்சம் நம்பிக்கை அளித்துள்ளது.

3 நாள் ஒலிம்பிக் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 24வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது.

1 சீனா - தங்கம் 6, வெள்ளி 2, வெண்கலம் 4 = மொத்தம் 12
2 ஜப்பான் - தங்கம் 5, வெள்ளி 1 , வெண்கலம் 0 = மொத்தம் 6
3 அமெரிக்கா - தங்கம் 4, வெள்ளி 2, வெண்கலம் 4 = மொத்தம் 10
4 கொரியா - தங்கம் 2 , வெள்ளி 0, வெண்கலம் 3= மொத்தம் 5
5 ரஷ்யா - தங்கம் 1, வெள்ளி 4, வெண்கலம் 2 = மொத்தம் 7
6 இத்தாலி - தங்கம் 1, வெள்ளி 1, வெண்கலம் 3 = மொத்தம் 5
7 ஆஸ்திரேலியா - தங்கம் 1, வெள்ளி 1, வெண்கலம் 1 = மொத்தம் 3
7 பிரான்ஸ் - தங்கம் 1 , வெள்ளி 1, வெண்கலம் 1 = மொத்தம் 3
9 ஹங்கேரி - தங்கம்1 , வெள்ளி 1, வெண்கலம் 0 = மொத்தம் 2
9 துனிஷியா - தங்கம் 1 , வெள்ளி 1, வெண்கலம் 0 = மொத்தம் 2
11 ஆஸ்திரியா - தங்கம் 1, வெள்ளி 0, வெண்கலம் 0 = மொத்தம் 1
24வது இடம் இந்தியா 0 , வெள்ளி 1, வெண்கலம் 0 = மொத்தம் 1

Story first published: Monday, July 26, 2021, 11:07 [IST]
Other articles published on Jul 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+