ஒலிம்பிக்கில் இன்று முட்டி மோதும் இந்தியா.. 3 பதக்கங்களை அள்ள செம வாய்ப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு
டோக்கியோ: 2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா இன்று மேலும் 3 பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
2020 ஒலிம்பிக் தொடர் நாளையோடு முடிவிற்கு வருகிறது. இந்த தொடர் முழுக்க சீனாதான் ஆதிக்கம் செலுத்தியது. தினமும் அந்த நாடு சராசரியாக 2 முதல் 3 தங்கங்களை வென்றது. இதனால் மொத்தமாக 36 தங்கம் உட்பட 79 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகித்து வருகிறது.
நாளை ஒருநாள் போட்டி மட்டுமே உள்ளதால், பெரும்பாலும் சீனாதான் இந்த வருடம் வெற்றியாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் சீனாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மிக சிறப்பாக ஆகியுள்ளது..

அமெரிக்கா
தொடக்கத்தில் தங்க பதக்கங்களின் அடிப்படையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது இரண்டாம் இடம் சென்றுள்ளது. அமெரிக்கா 31 தங்கம் உட்பட 99 பதக்கங்களுடன் 2ம் இடம் வகித்து வருகிறது. மொத்த பதக்கங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பொதுவாக தங்க பதக்கங்களின் அடிப்படையிலேயே பதக்க பட்டியல் தீர்மானிக்கப்படும்.

இந்தியா
இந்தியாவிற்கு இன்று மேலும் 3 பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் அதிதி அசோக் கோல்ப் போட்டியில் மூன்று பதக்கங்களில் ஏதாவது ஒன்று வாங்க வாய்ப்பு வாய்ப்பு உள்ளது. மல்யுத்தம் ஆண்கள் 65kg வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியா பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

இன்னொரு பதக்கம்
இது போக தடகளத்தில் ஆண்கள் ஈட்டி எறிதல் பைனல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. இதனால் இன்றைய நாள் இந்தியாவிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வாங்கி உள்ளது.

இந்தியா வாங்கிய பதக்கங்கள்
இந்தியா இதுவரை வாங்கிய பதக்கங்களின் விவரம்
எடை தூக்குதல்- வெள்ளி - மீராபாய் சானு
பாட்மிண்டன் - வெண்கலம் - பிவி சிந்து
பாக்சிங் - வெண்கலம் - லோவ்லினா
ஹாக்கி - வெண்கலம் - இந்திய ஆண்கள் அணி
மல்யுத்தம் - வெள்ளி - ரவி குமார் தஹியா

மற்ற நாடுகள்
இந்த புள்ளிகள் பட்டியலில் ஜப்பான் 24 தங்கம் உட்பட 51 பதக்கங்களுடன் 3ம் இடம் வகித்து வருகிறது. கிரேட் பிரிட்டன் 18 தங்கம் உட்பட 58 பதக்கங்களுடன் 4ம் இடம் வகித்து வருகிறது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 17 தங்கம் உட்பட 62 பதக்கங்களுடன் 5ம் இடம் வகித்து வருகிறது. ஆஸ்திரேலியா 17 தங்கம் உட்பட 44 பதக்கங்களுடன் 6ம் இடம் வகித்து வருகிறது.


Click it and Unblock the Notifications