Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் 2020 குதிரை ஓட்டம்.. 2வது சுற்று முடிவில் இந்திய வீரர் மிர்ஸா 13வது இடத்திற்கு பின்னடைவு!

டோக்கியோ: ஒலிம்பிக் குதிரை ஓட்ட போட்டிகள் பிரிவில் இன்று நடந்த கிராஸ் கண்ட்ரி ஆட்டத்தில் இந்திய வீரர் மிர்ஸா 13வது இடம் பிடித்தார்.

ஒலிம்பிக் குதிரை ஓட்ட போட்டிகள் இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இதில் மொத்தம் மூன்று விதமான சுற்றுகள் நடத்தப்படும். டிரெஸ்ஸேஜ், கிராஸ் கண்ட்ரி, ஜம்பிங் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் எடுக்கப்படும் புள்ளிகளை வைத்து போட்டியாளர்களின் இடம் தேர்வு செய்யப்படும். இந்த மூன்றுமே ரேங்கிங் சுற்று போட்டிகள் ஆகும்.

எத்தனை

எத்தனை

இதில் 25 இடங்களுக்குள் பிடிக்கும் நபர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் இந்தியா சார்பாக பவ்யாத் மீர்சா கலந்து கொண்டு ஆடி வருகிறார். நேற்று டிரெஸ்ஸேஜ் பிரிவில் அவர் மிகவும் சிறப்பாக ஆடினார்.

டிரெஸ்ஸேஜ்

டிரெஸ்ஸேஜ்

டிரெஸ்ஸேஜ் என்பது குதிரை ஓட்டம் திறனை சோதிப்பது ஆகும். குதிரையை ஒரு வீரர் எப்படி கையாள்கிறார், அதன் மூவ்கள் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கும் போட்டியாகும். இதில் இந்திய வீரர் மிர்ஸா 10வது இடம் பிடித்தார்.

தடை தாண்டுதல்

தடை தாண்டுதல்

ஆனால் இன்று கிராஸ் கண்ட்ரி போட்டிகள் நடைபெற்றது. இது தடை தாண்டும் குதிரை ஓட்டம் ஆகும். இதில் இன்று இந்திய வீரர் மிஸ்ரா 39.20 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதனால் நேற்று 10வது இடத்தில் இருந்தவர் இன்று 13வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தார்.

நாளை

நாளை

இதனால் நாளை நடக்கும் ஜம்பிங் சுற்றில் இவர் சிறப்பாக ஆட வேண்டும். இதுவும் குதிரைகளின் தாவும் திறனை சோதிக்கும் ஒரு வகை ஆட்டம் ஆகும். 25 இடங்களுக்குள் இவர் எப்படியாவது முடிக்க வேண்டும். அப்போது மட்டுமே ஒலிம்பிக் இறுதி சுற்றுக்கு இவர் தகுதி பெற முடியும்.

Story first published: Sunday, August 1, 2021, 13:17 [IST]
Other articles published on Aug 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+