"நாக் அவுட்".. ஒலிம்பிக் 2020 இரட்டையர் பிரிவு டென்னிஸ்.. சானியா - அங்கிதா ஜோடி போராடி தோல்வி!
டோக்கியோ: ஒலிம்பிக் 2020 டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியை தழுவி உள்ளது. உக்ரைனின் நாதியா கிசேனோக் மற்றும் லயும்லா கிசேனோக் ஜோடியிடம் இந்திய பெண்கள் இரட்டையர் அணி தோல்வியை தழுவியது.
ஒலிம்பிக் 2021 தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பலர் முக்கியமாக போட்டிகளில் ஆடுகிறார்கள். இன்று காலையில் நடந்த துடுப்பு படகு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியா சார்பாக அரவிந்த் சிங் மற்றும் அர்ஜுன் லால் ஆகியோர் செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளனர்.
அதன்பின் ஒலிம்பிக்ஸ் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு குழு ஆட்டத்தில் இன்று பிவி சிந்து இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவ 21-7, 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஒலிம்பிக் டென்னிஸ் பெண்கள் இரட்டை பிரிவு ஆட்டம் நடைபெற்றது.

டென்னிஸ்
இரட்டை பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்ஸா, அங்கிதா ரெய்னா ஜோடி உக்ரைனின் நாதியா கிசேனோக் மற்றும் லயும்லா கிசேனோக் ஜோடியை முதல் போட்டியில் எதிர்கொண்டது. இதில் தொடக்கத்தில் இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே உக்ரைன் ஜோடிக்கு இந்திய பெண்கள் அணி கொஞ்சமும் இடம் கொடுக்கவில்லை.

செட் முடிந்தது
முதல் செட்டை மிக எளிதாக 0-6 என்று புள்ளிகள் கணக்கில் சானியா மிர்ஸா, அங்கிதா ரெய்னா ஜோடி வென்றது. ஆனால் இரண்டாவது செட்டில் உக்ரைன் ஜோடி கொஞ்சம் மீண்டு வந்து டப் பைட் கொடுத்தது. இரண்டாவது செட்டில் மாறி மாறி இரு தரப்பும் புள்ளிகளை பெற்றது. ஒரு கட்டத்திற்கு மேல் யார்தான் வெற்றிபெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் இந்திய ஜோடிக்கு வெற்றிபெற வாய்ப்பு இருந்தது.

2வது
ஆனால் இரண்டாவது செட்டின் கடைசி கட்டத்தில் உக்ரைன் ஜோடி வேகம் காட்டி 7-6 என்ற கணக்கில் செட்டை கைபற்றியது.அதன்பின் தொடர்ந்து உக்ரைன் ஜோடியே ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு சுற்றுகளில் முடிவு தெரியாததால் மூன்றாவது டை பிரேக்கர் சுற்று தீவிரமாக சென்றது. இதை முதலில் 7-0 என்று இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு சென்றது.

வெளியேற்றம்
அதன்பின் சானியா மற்றும் ரெய்னா ஜோடி 8-8 என்று புள்ளிகளை பெற்று சரிவில் இருந்து மீண்டும் வந்தது. ஆனால் மீண்டும் வேகம் காட்டிய உக்ரைனின் நாதியா கிசேனோக் மற்றும் லயும்லா கிசேனோக் ஜோடி 8-10 என்று கடைசி செட்டை கைப்பற்றியது. இதனால் சானியா மற்றும் ரெய்னா ஜோடி 6-0, 6-7(0). 8-10 என்ற புள்ளிகளில் தோல்வி அடைந்தது. அதோடு ஒலிம்பிக் இரட்டையர் பெண்கள் சுற்றில் இருந்தும் வெளியேறியது.


Click it and Unblock the Notifications