ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன்:. இந்தியாவின் ராங்கிரெட்டி - சிராக் ஜோடி தோல்வி!
டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. இந்தோனேசியாவிடம் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி அடைந்தது.
ஒலிம்பிக் 2020 தொடரின் நான்காவது நாள் ஆட்டமான இன்றும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறார்கள். இன்று காலை வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.
முதல் போட்டியில் வென்ற பவானி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளார். அதன்பின் ஒலிம்பிக் பெண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் சுதிர்தா முகர்ஜி தோல்வி அடைந்து வெளியேறினார்.

தோல்வி
இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. இன்று இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்சயாவிற்கும், இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது.

திணறல்
இதில் தொடக்கத்தில் இருந்தே இந்தோனேசிய ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. அதிலும் முதல் செட்டில் பாதியில் சிராக் ஷெட்டிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் இந்திய ஜோடி சரிவர ஆட முடியாமல் திணறியது.

முதல் செட்
முதல் செட்டை இந்தோனேசிய ஜோடி 21 - 13 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பின் இரண்டாவது செட்டில் இந்திய இணையின் ஆட்டம் இன்னும் மோசமாக இருந்தது. இதனால் இரண்டாவது செட்டையும் இந்தோனேசிய ஜோடி 21 - 12 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தோல்வி
இதனால் இந்தோனேசியாவிடம் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்சயா ஜோடியிடம் தோல்வி அடைந்தது. அடுத்தடுத்த டேபிள் டென்னிஸ் பிரிவில் தொடர்ந்து இந்தியா சறுக்கி வருவது அதிர்ச்சி அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications