ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன்.. நம்பிக்கை தரும் சத்விக் - சிராக் ஜோடி.. இந்தியாவிற்கு 2வது வெற்றி
டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் ஜோடிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி வெற்றிபெற்றுள்ளது.
ஒலிம்பிக் 2020 தொடரின் ஐந்தாவது நாள் ஆட்டமான இன்று ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இன்று பிரிட்டனின் பென் லேன், சேன் விண்டி ஆகியோருக்கு எதிராக மூன்றாவது குழு போட்டியில் ஆடினார்கள்.
ஏற்கனவே முதல் குழு போட்டியில் சீனா தைபே அணியை வீழ்த்தி இந்தியா ஒரு புள்ளியை பெற்று இருந்தது.

இந்தோனேசியா
அதன்பின் இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்சயாவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி அடைந்தது. இதனால் 2 போட்டிகளில் ஒரு புள்ளி பெற்று பேட்மிண்டன் குழுவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தது.

கட்டாயம்
இதனால் இன்று நடக்கும் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருந்தது. சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடிக்கும் பென் லேன், சேன் விண்டி ஜோடிக்கும் இடையில் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்றது. முதல் செட்டில் இருந்தே இந்திய ஜோடி இதில் ஆதிக்கம் செலுத்தியது.

முதல் செட்
முதல் செட்டை எளிதாக 21 - 17 என்ற கணக்கில் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி வென்றது. இதனால் இரண்டாவது செட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டன் இருந்தது. இரண்டாவது செட்டில் பிரிட்டன் அணி மாறி மாறி புள்ளிகளை பெற்று கொஞ்சம் டப் கொடுத்தது.

வெற்றி
ஆனாலும் இந்திய வீரர் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி தொடர்ந்து சிறப்பாக ஆடி 21- 19 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றினர். இதனால் இரண்டு செட்களிலேயே ஆட்டம் முடிவிற்கு வந்தது. பிரிட்டன் ஜோடிக்கு எதிரான ஆட்டத்தில் 2 - 0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி வெற்றிபெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications