Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மக்கள் தொகை 33,860.. ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய மிக "குட்டி" நாடு.. வரலாறு படைத்தது சான் மரினோ!

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற மிக சிறிய நாடு என்ற சாதனையை சான் மரினோ தேசம் படைத்துள்ளது.

ஒலிம்பிக் 2020 தொடரில் சீனாவும், அமெரிக்காவும், போட்டியை நடத்தி வரும் ஜப்பானும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது சீனா 14 தங்கங்கள் வென்று 29 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்கா 13 தங்கம் வென்றுள்ளது. மொத்தமாக அமெரிக்கா 13 பதக்கங்கள் வென்றுள்ளது. மொத்த பதக்கங்கள் அடிப்படையில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான் மொத்தம் 13 தங்கம் வென்றுள்ளது. மொத்தமாக அந்த நாடு 22 பதக்கங்கள் வென்றுள்ளது. ஜப்பான் மூன்றாம் இடம் பிடித்த நிலையில் ஆஸ்திரேலியா எட்டு தங்கம் உட்பட 20 பதக்கங்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 7 தங்கங்களுடன் 25 பதக்கங்கள் வென்று 5ம் இடத்தில் உள்ளது.

சாதனை

சாதனை

இதில் ஒரே ஒரு வெள்ளி பதக்கத்துடன் இந்தியா 46வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ஒலிம்பிக்கில் சான் மரினோ என்ற நாடு புதிய சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற மிக சிறிய நாடு என்ற சாதனையை சான் மரினோ தேசம் படைத்துள்ளது. இன்று துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் சான் மரினோ வெண்கலம் வென்றது.

வெண்கலம்

வெண்கலம்

அந்த நாட்டின் அலஸ்சாண்ரா பெரில்லி வெண்கலப்பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் 29 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் சான் மாரினோ முதல் முறையாக தங்கத்தை வாங்கியது.

தங்கம்

தங்கம்

சான் மாரினோவின் மக்கள் தொகை வெறும் 33,860 தான். இது ஐரோப்பாவில் இருக்கும் மிக சிறிய நாடுதான். நாட்டின் மொத்த பரப்பளவே 61 சதுர கிலோ மீட்டர்தான். இவ்வளவு சிறிய நாடுதான் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

Story first published: Thursday, July 29, 2021, 18:53 [IST]
Other articles published on Jul 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+