For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டேபிள் டென்னிஸில் பெருத்த ஏமாற்றம்.. மணிகாவை தொடர்ந்து.. இந்திய வீரர் ஷரத் அஜந்தாவும் தோல்வி!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் ஷரத் அஜந்தா சீன வீரர் மா லாங்கிடம் 4-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார்.

ஒலிம்பிக் 2020 தொடரின் டேபிள் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் மணிகா பத்ரா, ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு வீரர் சத்யன் ஞானசேகரன் ஆகியோர் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தனர்.

ஒலிம்பிக் 2020

ஒலிம்பிக் 2020

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மணிகா பத்ரா நேற்று ஆஸ்திரியாவின் சோபியாவிடம் தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார். இதனால் ஏற்கனவே போர்ச்சுகல் வீரரை வீழ்த்திய ஷரத் கமல் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

இன்று

இன்று

இன்று டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியா சார்பாக ஷரத் கமல் அஜந்தா மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சீனாவின் மா லிங்கை எதிர்கொண்டார். கடைசியாக சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகலின் டியாகோ அப்போலீனாவை ஷரத் எதிர்கொண்டார். இதில் 4‐2 என்ற புள்ளி கணக்கில் ஷரத் கமல் அஜந்தா வெற்றி பெற்றார்.

மூன்றாம் சுற்று

மூன்றாம் சுற்று

இதையடுத்து இன்று மூன்றாம் சுற்றில் ஷரத் கமல் அஜந்தா மற்றும் சீனாவின் மா லாங் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் முதல் செட்டை 11-7 என்ற கணக்கில் சீனாவின் மா லாங் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றை ஷரத் 11-8 என்ற புள்ளிகள் கைப்பற்றினார். பின்னர் மீண்டும் மூன்றாவது சுற்றை 13-11 என்ற கணக்கில் சீனாவின் மா லாங் கைப்பற்றினார்.

இரண்டு சுற்றுகள்

இரண்டு சுற்றுகள்

பின்னர் 4 மற்றும் 5வது சுற்று முழுக்க சீனாவின் மா லாங்தான் ஆதிக்கம் செலுத்தினார். இரண்டு சுற்றுகளிலும் ஷரத் கடுமையாக திணறிய நிலையில் 11-4 என்ற கணக்கில் இரண்டு சுற்றுகளையும் லாங் கைப்பற்றினார். இதனால் 5 சுற்றுகளிலேயே ஆட்டம் முடிவிற்கு வந்தது. 5 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் ஷரத் அஜந்தா சீன வீரர் மா லாங்கிடம் 4-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார்.

Story first published: Tuesday, July 27, 2021, 12:52 [IST]
Other articles published on Jul 27, 2021
English summary
Olympic 2020: Sharath Kamal loses the Table Tennis third round to China's Ma Long in 4-1 points.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+