Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் 2020.. டேபிள் டென்னிஸில் இந்திய வீரர் ஷரத் அஜந்தா வெற்றி.. 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் ஷரத் அஜந்தா வெற்றி பெற்றார். போர்ச்சுகலின் டியாகோ அப்போலீனாவை வீழ்த்தி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஷரத் அஜந்தா வெற்றி பெற்றார்.

ஒலிம்பிக் 2020 தொடரின் டேபிள் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வி அடைந்தார்.

இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான இவர் தோல்வி அடைந்தது பெரிய அதிர்ச்சி அளித்தது. ஆனால் பெண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் மணிகா பத்ரா வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று

இன்று

இந்த நிலையில்தான் இன்று டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியா சார்பாக ஷரத் கமல் அஜந்தா கலந்து கொண்டார். இரண்டாம் சுற்று ஆட்டமான இதில் போர்ச்சுகலின் டியாகோ அப்போலீனாவை ஷரத் எதிர்கொண்டார். முதல் செட்டில் மிக மோசமாக ஆடினாலும் அடுத்தடுத்த செட்களில் ஷரத் இதில் ஆதிக்கம் செலுத்தினார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

முதல் சுற்றில் 2‐11 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்த ஷரத் அடுத்த இரண்டு செட்களை 11‐8, 11‐5 என்று வென்றார். அதன்பின் நான்காவது செட்டில் டியாகோ மீண்டும் காம்பேக் கொடுத்தார். இந்த சுற்றில் டியாகோ 9‐11 என்ற புள்ளிகள் பெற்று வென்றார்.

அதிரடி

அதிரடி

பின்னர் மீண்டு வந்த ஷரத் 11‐6 என்று அடுத்த சுற்றை கைப்பற்றினார். இதனால் கடைசி சுற்றில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 6வது சுற்றையும் 11‐9 என்ற புள்ளிகள் எடுத்து ஷரத் கைப்பற்றினார்.

வெற்றி

வெற்றி

டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் ஷரத் அஜந்தா 4‐2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். போர்ச்சுகலின் டியாகோ அப்போலீனாவை வீழ்த்தி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஷரத் அஜந்தா வெற்றி பெற்றார். இதையடுத்து மூன்றாம் சுற்று போட்டிக்கு அஜந்தா தகுதி பெற்றுள்ளார்.

Story first published: Monday, July 26, 2021, 11:07 [IST]
Other articles published on Jul 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+