Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் பெண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ்.. சுதிர்தா முகர்ஜி தோல்வி.. வெளியேற்றம்!

டோக்கியோ: ஒலிம்பிக் பெண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் சுதிர்தா முகர்ஜி தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஒலிம்பிக் 2020 தொடரின் நான்காம் நாளான இன்று இந்தியா அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவானி தேவி இன்று வாள்வீச்சு போட்டியில் இரண்டாம் சுற்றோடு தோல்வி அடைந்து வெளியேறினார்.

 Olympic 2020: Sutirtha Mukherjee loses to Portugals Yu Fu in Table Tennis

இந்த நிலையில் தற்போது பெண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் சுதிர்தா முகர்ஜி தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளார். போர்ச்சுகல் வீராங்கனை ப்யு யூவிடம் தோல்வி அடைந்து சுதிர்தா முகர்ஜி ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.

11-3, 11-3,11-5, 11-5 என்ற நேர் செட்களில் சுதிர்தா முகர்ஜி தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் சுதிர்தா முகர்ஜி கொஞ்சம் கூட எதிரணி வீராங்கனைக்கு டப் கொடுக்கவில்லை. முதல் செட்டில் இருந்தேதான் ஆதிக்கம் செலுத்தினார்.

இன்று காலை நடந்த ஆட்டத்தில் ஆண்கள் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் ஷரத் அஜந்தா வெற்றி பெற்றார். போர்ச்சுகலின் டியாகோ அப்போலீனாவை வீழ்த்தி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஷரத் அஜந்தா வெற்றி பெற்றார். இன்னொரு பக்கம் நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வி அடைந்தார். நேற்று பெண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் மணிகா பத்ரா வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 26, 2021, 11:57 [IST]
Other articles published on Jul 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+