ஒலிம்பிக் 2020.. பதக்க பட்டியலில் மேலும் பின்தங்கிய இந்தியா.. பதக்கங்களை அள்ளும் சிறிய நாடுகள்!
டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா இரண்டு பதக்கங்களை மட்டும் பெற்று 62வது இடத்திற்கு பின் தங்கி உள்ளது.
ஒலிம்பிக் 2020 தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் ஒரு வார போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா பெரிதாக பதக்கங்களை வெல்லவில்லை.
இந்திய அணி இதுவரை பளு தூக்குதலில் ஒரு வெள்ளி, பாட்மின்டனில் ஒரு வெண்கலம் வாங்கி உள்ளது. இந்தியாவிற்காக மீராபாய் சானு மற்றும் பிவி சிந்து பதக்கம் வென்று உள்ளனர்.

எத்தனை
இதனால் இந்தியா தற்போது 2 பதக்கங்களுடன் 62வது இடத்தில் உள்ளது. முன்பு 40வது இடத்தில் இந்தியா இருந்தது. அதன்பின் பல்வேறு சிறிய அணிகள் பதக்கங்கள் வாங்கிய நிலையில் இந்தியா 60வது இடத்திற்கு பின் தங்கியது. அதன்பின் மேலும் பின்தங்கி தற்போது 62வது இடத்தில் உள்ளது.

சீனா
29 தங்கம் உட்பட 62 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகித்து வருகிறது. முதலிடத்தில் இனி சீனாவை முந்துவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் பெரும்பாலும் சீனாதான் இந்த வருடம் வெற்றியாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 22 தங்கம் உட்பட 64 பதக்கங்களுடன் 2ம் இடம் வகித்து வருகிறது.

அமெரிக்கா
ஆனால் மொத்த பதக்கங்களின் அடிப்படையில் அமெரிக்கா 64 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம் உட்பட 33 பதக்கங்களுடன் 3ம் இடம் வகித்து வருகிறது. ஆஸ்திரேலியா 14 தங்கம் உட்பட 33 பதக்கங்களுடன் 4ம் இடம் வகித்து வருகிறது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 12 தங்கம் உட்பட 50 பதக்கங்களுடன் 5ம் இடம் வகித்து வருகிறது

சிறிய நாடுகள்
இந்த முறை ஒலிம்பிக்கில் சிறிய நாடுகள் கூட அதிக பதக்கங்களை வாங்கி அசத்தி உள்ளது. செக் குடியரசு 4 தங்கம் வாங்கி உள்ளது. கனடா 3 தங்கம் வாங்கி உள்ளது. குரேஷியா 3 தங்கம் வாங்கி உள்ளது. பிரேசில், கியூபா, ஹங்கேரி, டென்மார்க், ஸ்லோவேனியா, ஈக்குவேடார், கிரீஸ், கோசோவா, கத்தார் ஆகிய நாடுகள் தலா 2 தங்கங்களை வாங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications