Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் 2020.. 5 பதக்கங்களை வென்றும் பதக்க பட்டியலில் பின்தங்கிய இந்தியா.. என்ன காரணம்?

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட மொத்தம் 5 பதக்கங்களை பெற்று உள்ளது. இதன் மூலம் புல்லில் பட்டியலில் 65வது இடத்திற்கு பின் தங்கி உள்ளது.

ஒலிம்பிக் 2020 தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டங்கள் மட்டுமே மீதம் உள்ளது. முக்கியமாக இந்தியா ஆடும் போட்டிகள் பெரிதாக எதுவும் இனி கிடையாது.

சில மல்யுத்த போட்டிகளும், நீண்ட தூர நடை ஓட்டங்களும் மட்டுமே இந்திய அணிக்கு உள்ளது. இந்தியாவிற்கு பெரிதாக பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் எதுவும் இப்போது இல்லை.

பதக்கம்

பதக்கம்

இந்திய அணி இதுவரை பளு தூக்குதலில் ஒரு வெள்ளி, பாட்மின்டனில் ஒரு வெண்கலம் வாங்கி உள்ளது. இந்தியாவிற்காக மீராபாய் சானு மற்றும் பிவி சிந்து பதக்கம் வென்று உள்ளனர். அதேபோல் டென்னிஸ் ஆண்கள் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வாங்கி உள்ளது.

லோவ்லினா

லோவ்லினா

பாக்சிங்கில் ஒற்றை ஆளாகி இந்தியாவின் லோவ்லினா ஒரு வெண்கல பதக்கம் வாங்கி உள்ளார். இதுபோக மல்யுத்தத்தில் இந்தியாவின் ரவி குமார் தஹியா வெள்ளிப்பதக்கம் வாங்கி இருக்கிறார். மொத்தமாக ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட மொத்தம் 5 பதக்கங்களை பெற்று உள்ளது.

தங்கம்

தங்கம்

இந்தியா தங்கம் எதுவும் வாங்காத காரணத்தால் புள்ளிகள் பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் மூலம் புல்லில் பட்டியலில் 65வது இடத்திற்கு பின் தங்கி உள்ளது. பதக்கங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா 32வது இடத்தில் உள்ளது.

எத்தனை இடம்

எத்தனை இடம்

34 தங்கம் உட்பட 74 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகித்து வருகிறது. பெரும்பாலும் சீனாதான் இந்த வருடம் வெற்றியாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 30 தங்கம் உட்பட 92 பதக்கங்களுடன் 2ம் இடம் வகித்து வருகிறது. ஜப்பான் 22 தங்கம் உட்பட 47 பதக்கங்களுடன் 3ம் இடம் வகித்து வருகிறது.

 ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 17 தங்கம் உட்பட 43 பதக்கங்களுடன் 4ம் இடம் வகித்து வருகிறது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 16 தங்கம் உட்பட 60 பதக்கங்களுடன் 5ம் இடம் வகித்து வருகிறது. கிரேட் பிரிட்டன் 16 தங்கம் உட்பட 52 பதக்கங்களுடன் 4ம் இடம் வகித்து வருகிறது.

Story first published: Saturday, August 7, 2021, 0:08 [IST]
Other articles published on Aug 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+