Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் கிராமத்தில் 3 வீரர்களுக்கு கொரோனா.. போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்.. பதற்றத்தில் டோக்கியோ

டோக்கியோ: ஒலிம்பிக் முகாமில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

கடந்த முறை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால், இந்த முறை மிகவும் பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

கொரோனா பாதுகாப்பு ஏற்பாடாக, வீரர், வீராங்கனைகள், தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கடுமையான கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும், ஒலிம்பிக் கிராமத்தில் தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

2 புதிய பாதிப்பு

2 புதிய பாதிப்பு

இந்நிலையில் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளவிருக்கும் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்கள் ஆவர். ஒரே ஒருவர் மட்டும் டோக்கியோவில் இருந்த தனியார் ஹோட்டலில் இருந்தவர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தனி அறைகளில் குவாரண்டைன் செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும் அந்த வீரர்களின் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

18,000 வீரர்கள்

18,000 வீரர்கள்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசியுள்ள ஒலிம்பிக் போட்டிக்குழு தலைவர் கிறிஸ்டோப் டுபி, இதுவரை 18,000 போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் ஜப்பானுக்கு வருவதற்கு முன்னதாகவே கிட்டத்தட்ட 40,000 பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் குறைந்தது 2 நெகடிவ் என்ற சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

Recommended Video

Tamilnadu Olympics வீரர்களுக்கு Surprise தந்த Kamal | Oneindia Tamil
பரபரப்பு

பரபரப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் மட்டும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் ஒலிம்பிக் கிராமத்திற்குள்ளேயே கொரோனா நுழைந்துவிட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

Story first published: Sunday, July 18, 2021, 12:37 [IST]
Other articles published on Jul 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+