Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்-ஹாக்கியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்துடன் இந்தியா தோல்வி! குத்துச்சண்டையில் Nikhat தோல்வி

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர்க்கான ஹாக்கி போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியத்துடன் இந்தியா பல பரிட்சை நடத்தியது. பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி ஆட்டத்தின் 18 வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது.

இதன் மூலம் இந்தியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும் சுதாரித்துக் கொண்டு விளையாடி பெல்ஜியம் வீரர் ஸ்டாக் 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

Olympics 2024 shooting 2024

இதனை அடுத்து நாற்பத்தி நான்காவது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜான் இரண்டாவது கோல் அடித்தார். இதனை சமன் செய்ய இந்தியா போராடிய நிலையில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதை அடுத்து மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை நிக்காஹ்த் ஷரின் உலக சாம்பியனான சீனா வீராங்கனை வூ யூவை எதிர்கொண்டார்.

இதில் மிகவும் மோசமாக செயல்பட்டதால் பூஜ்ஜியத்துக்கு 5 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். இதேபோன்று வில்வித்தை பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் சீன வீரரிடம் பூஜ்ஜிய்த்துக்கு 6 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி முதல் சுற்றிலிருந்து வெளியேறினார். மகளிருக்கான 20 கிலோமீட்டர் நடைப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி 41வது இடத்தை பிடித்தார். இவர் 20 கிலோமீட்டர் நடைப்பயணத்தை ஒரு மணி நேரம் 39 நிமிடம் 55 வினாடிகளில் நிறைவு செய்தார்.

இவருக்கும் தங்கப்பதக்கம் வாங்கிய மகளிருக்கு 14 நிமிடம் ஒரு வினாடி வித்தியாசமாகும். இதேபோன்று மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைப்பில் த்ரீ பொசிஷன் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஷிப்ட் கவுர் சம்ரா மற்றும் அஞ்சும் மவுடிகல் ஆகியோர் முதல் சுற்றிலே தோல்வியை தழுவி வெளியேறினார்.

Story first published: Thursday, August 1, 2024, 17:46 [IST]
Other articles published on Aug 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+