
அடுத்தடுத்த இடங்கள்
இவர், சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் 100 மீ., ஓட்டப்பந்தய போட்டியில், 10.61 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இவர், தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். முன்னதாக, கடந்த 1988ம் ஆண்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் Florence Griffith-Joyner 10.49 வினாடிகளில் இலக்கை கடந்து படைத்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது 10.54 வினாடியில் இலக்கை எட்டி, இரண்டாவது அதிகபட்ச வேகத்தை எலைன் பதிவு செய்து சாதனை புரிந்துள்ளார். அடுத்த இரு இடங்களை முறையே ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் பிரேசர்-பிரைசி (10.73 வினாடி), ஷெரிகா ஜாக்சன் (Shericka Jackson) (10.76 வினாடி) கைப்பற்றினர். டோக்கியோ ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் இவர்கள் மூவரும் முதல் மூன்று இடங்களை கைப்பற்றி பதக்கம் வென்றிருந்தனர்.

கடைசி இடம்
இப்போட்டியில் அமெரிக்காவின் ஷா'காரி ரிச்சர்ட்சன் (Sha'Carri Richardson) மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் நடந்த ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த இவர், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, இவர் ஒரு மாதம் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார். இதனால், இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. தடைக்கு பின் மீண்டும் போட்டிக்கு திரும்பிய ஷா'காரி, 11.14 வினாடியில் இலக்கை கடந்து கடைசி இடமான 9வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

ஆதிக்கம்
முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதிச் சுற்றில் 100 மீட்டர் தூரத்தை 10 புள்ளி 61 நொடிகளில் கடந்து ஜமைக்காவின் எலைன் தாம்சன் ஹெரா புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார். அத்துடன் ரியோ ஒலிம்பிக்கை தொடர்ந்து இந்த ஒலிம்பிக்கிலும் அவர் தங்கம் வென்று அசத்தினார். இவருக்கு அடுத்ததாக 10.74 நொடிகளில் இலக்கை எட்டிய சக நாட்டு வீராங்கனையான Fracer Pricey வெள்ளி வென்றார். ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் இது அவருக்கு நான்காவது பதக்கமாக அமைந்தது. 3-வது இடத்தையும் ஜமைக்காவின் ஷெரிக்கா பிடித்ததால், 3 பதக்கங்களையும் கைப்பற்றி ஓட்டப்பந்தயத்தில் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை ஜமைக்கா நாட்டினர் நிரூபித்தனர்.

9.74 வினாடி
ஆண்களுக்கான 100M ஓட்டப்பந்தய போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்ட்ரே டி கிராஸ் 9.74 வினாடியில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். அமெரிக்காவின் ஃப்ரெட் கெர்லி 9.78 வினாடிகளுடன் இரண்டாம் இடமும், ரோனி பேக்கர் 9.82 வினாடிகளுடன் மூன்றாம் இடமும் பிடித்தனர். அமெரிக்கன் நோவா லைல்ஸ் 19.52 வினாடிகளில் ஆண்களுக்கான 200 மீ ஓட்டப்பந்தய போட்டியில் வென்றார். ஒலிம்பிக் சாம்பியன் ஏதிங் மு 1: 55.04 வினாடியில் பெண்கள் 800 மீ போட்டியில் வென்றார்.


Click it and Unblock the Notifications