For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Paris Olympics 2024 LIVE: நிறைவு விழாவில் ரசிகர்கள் பிரியா விடை

2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 32 விளையாட்டு போட்டிகளில் 329 பிரிவில் பந்தயங்கள் நடைபெற்று பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்த தொடரில் இந்தியாவிலிருந்து 112 போட்டியாளர்கள், 16 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். இதனை ஜியோ சினிமா மொபைல் செயலி மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனல்களில் இலவசமாக பார்க்கலாம். அதன் அப்டேட்ஸ்களை நமது தளத்தில் துல்லியமாகவும், விரைவாகவும் காணலாம்.

Paris Olympics 2024                                                 2024  medal tally  opening ceremony

Aug 12, 2024, 12:03 am IST

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியா சார்பாக வெண்கலப்பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஸ் இந்திய கொடியை ஏந்தி ரசிகர்களிடம் பிரியா விடை

Aug 11, 2024, 5:02 pm IST

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம் வென்று இருக்கிறது.

Aug 11, 2024, 4:55 pm IST

2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. சீனா 39 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் வென்று உள்ளது.

Aug 11, 2024, 1:20 pm IST

2024 ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்களின் போட்டிகள் நேற்றுடன் முடிந்து விட்டன. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா மொத்தம் ஆறு பதக்கங்களை வென்று இருக்கிறது.

Aug 10, 2024, 10:03 pm IST

வினேஷ் போகட்டுக்கு வெள்ளிப்பதக்கம் அளிப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த உலக மல்யுத்த அமைப்பு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விரைவில் ஒரு முடிவை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் தீர்ப்பு எப்போது என்ற தகவல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Aug 10, 2024, 9:47 pm IST

மல்யுத்த வீராங்கனைவினேஷ் போகட் தனக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி விளையாட்டுக்கானசர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தீர்ப்பு நிகழ்வு சற்று தாமதம் ஆகி உள்ளது.

Aug 10, 2024, 7:06 pm IST

மகளிர் கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் அதிதி அசோக் மற்றும் தீக்ஷா தாகர் முன்னிலை பெற முடியவில்லை. அவர்கள் பின்னடைவை சந்தித்து உள்ளனர்.

Aug 10, 2024, 4:56 pm IST

மகளிர் 76 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் ரீத்திகா ஹூடா காலிறுதி சுற்றில் தோல்வியடைந்தார். கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபெரியிடம் தோல்வியடைந்த நிலையில், வெண்கலப் பதக்கம் போட்டிக்கான ரெப்பிகேஜ் சுற்றில் பங்கேற்கவுள்ளார்.

Aug 10, 2024, 4:09 pm IST

மகளிர் 76 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் ரீத்திகா ஹூடா கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Aug 10, 2024, 3:11 pm IST

வினேஷ் போகட் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் எனக் கோரி இந்திய ஒலிம்பிக் சங்கம் விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அதன் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

Aug 10, 2024, 2:35 pm IST

வினேஷ் போகட் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என மேல் முறையீடு செய்துள்ள நிலையில் இன்று இரவு அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 10, 2024, 1:03 pm IST

இன்று இந்தியா கோலஃப் மற்றும் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ எடைப் பிரிவு போட்டிகளில் மட்டுமே பங்கேற்க உள்ளது.

Aug 10, 2024, 11:04 am IST

2024 ஒலிம்பிக்கில் இந்தியா இன்று நான்கு போட்டிகளில் மட்டுமே பங்கேற்க உள்ளது.

Aug 09, 2024, 11:22 pm IST

ஆடவருக்கான மல்யுத்தம் 57 கிலோ ஃபிரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டேரியன் க்ரூஸை 13-5 என்ற புள்ளிகள் கணக்கில் 21 வயதாகும் அமன் ஷெராவத் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக 6வது பதக்கத்தை இந்தியா கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Aug 09, 2024, 2:33 pm IST

மகளிருக்கான ரீலே ஓட்டப் பந்தயம் - தமிழக வீராங்கனை சுபா வெங்கடேஷன், வித்யா ராம்ராஜ் அடங்கிய அணி முதல் சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறியது.

Aug 09, 2024, 10:21 am IST

2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா 64வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார். அதே போல, வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மற்றொரு பதக்கம் நழுவிப் போனது. இது போன்ற காரணங்களால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.

Aug 09, 2024, 8:20 am IST

ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்திய நெதர்லாந்து தங்கப் பதக்கம் வென்றது. ஜெர்மனி வெள்ளிப் பதக்கமும், இந்தியா வெண்கலப் பதக்கமும் வென்றன.

Aug 09, 2024, 7:50 am IST

இன்று இந்தியாவுக்கு ஒரு பதக்கப் போட்டி மட்டுமே உள்ளது. ஆண்கள் மல்யுத்தத்தில் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.

Aug 09, 2024, 1:18 am IST

ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இவர் 92.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Aug 09, 2024, 1:15 am IST

ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக ஒலிம்பிக் தொடரில் 2வது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

Aug 09, 2024, 12:36 am IST

நீரஜ் சோப்ராவின் மூன்றாவது எறிதல் பவுல் ஆனது. தொடர்ந்து நீரஜ் சோப்ரா 2வது இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் நதீம் தொடர்ந்து முதலிடம்

Aug 09, 2024, 12:22 am IST

நீரஜ் சோப்ரா தனது 2வது எறிதலில் 89.94 மீட்டர் தூரம் வீசி 2வது இடத்திற்கு முன்னேற்றம்

Aug 09, 2024, 12:19 am IST

ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்துள்ளார்

Aug 09, 2024, 12:19 am IST

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி ஒலிம்பிக்கில் புதிய சாதனை

Aug 09, 2024, 12:19 am IST

ஆடவருக்கான 200 மீ ஓட்டப்பந்தயத்தில் போட்ஸ்வானா நாட்டின் டொபாகோ 19.46 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கத்தை கைப்பற்றியுள்ளார். இந்தப் போட்டியில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 19.70 வினாடிகளில் வெண்கலம் வென்றுள்ளார். மற்றொரு அமெரிக்கா வீரரான கென்னி பெட்னரிக் 19.62 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி வெள்ளி வென்று அசத்தியுள்ளார்

Aug 09, 2024, 12:19 am IST

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி : நீரஜ் சோப்ரா தனது முதல் எறிதல் பவுல் ஆனது.

Aug 08, 2024, 9:53 pm IST

மல்யுத்தம் ஆடவருக்கான ஃபிரீஸ்டைல் 57 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் ஹிகுச்சியிடம் 10-0 என்ற புள்ளிகளில் இந்தியாவின் இளம் வீரர் அமன் ஷெராவத் தோல்வியடைந்தார்.

Aug 08, 2024, 7:22 pm IST

52 ஆண்டுகளுக்கு பறகு ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ந்து 2வது முறையாக பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணி சாதனை. ஸ்பெயினை 2க்கு1 என்ற கணக்கில் வீழ்த்தி அபாரம்

Aug 08, 2024, 6:37 pm IST

ஹாக்கி - வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் ஸ்பெயினுக்கு எதிராக முன்னிலை வகித்து வருகிறது.

Aug 08, 2024, 6:37 pm IST

ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் தனது 10வது கோலை இந்த ஒலிம்பிக் தொடரில் அடித்து அசத்தியுள்ளார்.

Aug 08, 2024, 6:17 pm IST

ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனி அணி முதல் கோல் அடித்த நிலையில், இந்திய அணி தனது முதல் கோலை அடித்து அசத்தலாக விளையாடி வருகிறது. 2வது குவார்ட்டர் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்துள்ள நிலையில், ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Aug 08, 2024, 5:58 pm IST

ஹாக்கியில் இந்திய அணிக்கு எதிரான வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனி அணி முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

Aug 08, 2024, 5:58 pm IST

இந்தியா - ஸ்பெயின் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் மன்ப்ரீத் மற்றும் குர்ஜாந்த் காயமடைந்து உள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

Aug 08, 2024, 4:46 pm IST

ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் விளையாடும் கடைசி போட்டி என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Aug 08, 2024, 2:37 pm IST

மகளிருக்கான 100 மீட்டர் தடகள போட்டியில் Repechage பிரிவிலும் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி தோல்வி

Aug 08, 2024, 1:16 pm IST

கோல்ஃப் - மகளிர் பிரிவில் 2வது சுற்றில் அதீதி அசோக் விளையாடி வருகிறார். தற்போது 13வது இடத்தில் அவர் உள்ளார்.

Aug 08, 2024, 12:46 pm IST
Mykhel

நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு தருகிறேன்..ரிஷப் பண்ட் அறிவிப்பு!

Aug 08, 2024, 12:13 pm IST

வினேஷ் போகத் மீதும் தவறு இருக்கிறது..அவர் பழியை ஏற்று கொள்ள வேண்டும்! பாஜகவின் சாய்னா நேவால் கருத்து

Aug 08, 2024, 9:06 am IST

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடக்கவுள்ளது.

Aug 08, 2024, 7:25 am IST

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மல்யுத்தம் வென்றது.. நான் தோற்றுவிட்டேன்.. எனது கனவுகள் கலைந்துவிட்டன. இதற்கு மேல் என்னிடம் போராட வலிமை கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

Aug 08, 2024, 1:28 am IST

ஸ்டீப்லெசேஸ் 3000 மீட்டர் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அவிநாஸ் சாபேல் 11வது இடத்தை மட்டுமே பிடித்தார்.

Aug 08, 2024, 1:19 am IST

பளுதூக்குதலில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, 4வது இடத்தை மட்டுமே பிடித்து தோல்வி

Aug 07, 2024, 11:59 pm IST

மூன்றாவது முயற்சியில் மீராபாய் சானு, 88 கிலா எடையை வெற்றிக்கரமாக தூக்கினார்.

Aug 07, 2024, 11:55 pm IST

பளுதூக்குதல் : 88 கிலோ எடையை மீரா பாய் சானுவால் தூக்க முடியவில்லை.

Aug 07, 2024, 10:08 pm IST

இன்று இரவு 10.45 மணிக்கு ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் தகுதிச் சுற்று உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் அப்துல்லா அபூபக்கர் மற்றும் பிரவீன் சித்திரைவேல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Aug 07, 2024, 8:17 pm IST

இன்று இரவு 11 மணிக்கு பளு தூக்குதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்க இருக்கிறார்.

Aug 07, 2024, 7:21 pm IST

வினேஷ் போகட் தகுதி நீக்க தகவலை கேட்டு இதயம் உடைந்து போனதாக பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பிவி சிந்து கூறி உள்ளனர்.

Aug 07, 2024, 4:49 pm IST

மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி 7வது இடம் பிடித்து வெளியேறினார்.

Aug 07, 2024, 4:49 pm IST

டேபிள் டென்னிஸ் : மகளிர் குழு பிரிவில் காலிறுதியில் ஜெர்மனியிடம் இந்தியா தோல்வி

Aug 07, 2024, 4:49 pm IST

மல்யுத்தம் : மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்டீம் பங்கல் தோல்வி

Aug 07, 2024, 4:41 pm IST

Vinesh Phogat தகுதி நீக்கத்தில் சதி இருக்கிறது!வெற்றியை யாரோ ஒருவரால் ஜீரணிக்க முடியவில்லை- 2008 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கருத்து

Aug 07, 2024, 4:16 pm IST

வினேஷ் போகட் தண்ணீரை குடிக்காமல் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து இருக்கிறார். அதன் பிறகு ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் சைக்கிளிங், ஜாக்கிங் என செய்து இருக்கிறார்.

Aug 07, 2024, 4:16 pm IST

அப்போதும் உடல் எடை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. இதன் பிறகு நீராவி குளியல் செய்து தன்னுடைய தண்ணீர் சத்தை வினேஷ் போகட் குறைக்க முயற்சி எடுத்து இருக்கிறார். அப்போதும் 50 கிலோ வரவில்லை என்பதால் உச்சகட்டமாக தன்னுடைய உடலில் இருக்கும் ரத்தத்தை மருத்துவர்கள் உதவியுடன் வினேஷ் போகட் சிலேன் மூலம் எடுத்து இருக்கிறார்.

Aug 07, 2024, 3:47 pm IST

வினேஷ் போகத்திற்கு பதிலாக மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் கியூபா வீராங்கனை லோபஸ் விளையாடவுள்ளார். அதேபோல் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் வீராங்கனை சுசாகி மற்றும் உக்ரைன் வீராங்கனை ஓக்சானா மோதவுள்ளனர்.

Aug 07, 2024, 1:00 pm IST

வினேஷ் நீங்கள் இந்தியாவின் சாம்பியன்; நீங்கள் இந்தியாவின் இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் வினேஷ் போகட் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார். இந்த பின்னடவு வேதனை அளிக்கிறது; எனது வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை - பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் பதிவு

Aug 07, 2024, 12:29 pm IST

இன்று மல்யுத்த விளையாட்டில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் பங்கேற்க இருந்த இந்தியாவின் வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் கூடுதல் எடை காரணமாக நீக்கப்பட்டார்.

Aug 07, 2024, 11:43 am IST

மாரத்தான் நடைபயிற்சி பந்தயம் கலப்பு அணி பிரிவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் சூரஜ் பன்வார் - பிரியங்கா பங்கேற்று உள்ளனர்.

Aug 07, 2024, 9:49 am IST

அமெரிக்கா 24 தங்கம், 31 வெள்ளி, 31 வெண்கலம் வென்று 2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Aug 07, 2024, 9:02 am IST

மகளிர் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்க உள்ளார். அவர் உலகின் முன்னணி பளு தூக்குதல் வீராங்கனை ஆவார். முன்னதாக உலக சாம்பியன் பட்டம், ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் ஆகியவற்றை வென்று இருக்கிறார். அவர் தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

Aug 07, 2024, 8:04 am IST

2024 ஒலிம்பிக் தொடரில் இன்று இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். அதில் வென்றால் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும்.

Aug 07, 2024, 12:12 am IST

ஒலிம்பிக் ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதியில் ஜெர்மனி அணி 3க்கு2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி. இந்தியா இனி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும்.

Aug 06, 2024, 11:38 pm IST

ஹாக்கி அரை இறுதி -இந்தியா இரண்டாவது கோலை அடித்தது. தற்போது இரு அணிகளும் 2 - 2 என சமநிலையில் உள்ளன.

Aug 06, 2024, 11:27 pm IST

ஹாக்கி அரை இறுதி - ஜெர்மனி இரண்டாவது கோலை அடித்தது. முதல் பாதியின் முடிவில் ஜெர்மனி 2 - 1 என முன்னிலையில் உள்ளது. இந்தியா பின்னடைவை சந்தித்து உள்ளது.

Aug 06, 2024, 11:01 pm IST

ஹாக்கி அரை இறுதி - இந்தியாவுக்கு எதிராக ஜெர்மனி முதல் கோலை அடித்தது. தற்போது இரு அணிகளும் 1 - 1 என சம நிலையில் உள்ளன.

Aug 06, 2024, 10:47 pm IST

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் வினேஷ் போகட்

Aug 06, 2024, 10:46 pm IST

மல்யுத்தம் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகட் தகுதி

Aug 06, 2024, 10:45 pm IST

இந்தியா - ஜெர்மனி ஹாக்கி அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதல் கோலை அடித்தது. இந்தியா 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

Aug 06, 2024, 10:44 pm IST

ஹாக்கி அரையிறுதியில் ஜெர்மனிக்கு எதிராக இந்திய அணி முதல் கோல் அடித்தது.

Aug 06, 2024, 10:44 pm IST

மல்யுத்தம்- மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் அரையிறுதியில் 1-0 என முன்னிலை

Aug 06, 2024, 8:28 pm IST

ஆடவர் ஹாக்கி முதல் அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. ஆகஸ்ட் 8 அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.

Aug 06, 2024, 7:33 pm IST

இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோத உள்ள ஹாக்கி அரை இறுதிப் போட்டி இன்று இரவு 10.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Aug 06, 2024, 6:33 pm IST

இன்று இரவு 10.25 மணிக்கு மகளிர் 50 கிலோ மல்யுத்த விளையாட்டின் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் பங்கேற்க இருக்கிறார்.

Aug 06, 2024, 5:46 pm IST

மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கிரண் பஹலுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அவர் ஆறாவது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

Aug 06, 2024, 4:28 pm IST

மகளிர் மல்யுத்தத்தில் வினேஷ் போகட் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் உக்ரைன் வீராங்கனை ஒக்ஷானாவை கால் இறுதி சுற்றில் 7 - 5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.

Aug 06, 2024, 4:24 pm IST

மல்யுத்தம்- மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் அரையிறுதிக்கு தகுதி

Aug 06, 2024, 4:05 pm IST

ஈட்டி எறிதல் : பாகிஸ்தான் வீரர் அர்ஸ்த் நதீம் தன்னுடைய முதல் முயற்சியில் 86.59 மீட்டர் தூரம் வீசி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.

Aug 06, 2024, 4:05 pm IST

மற்றொரு இந்திய வீரரான கிஷோர் சேனா 80.21 மீட்டர் தூரம் வீசி தொடரிலிருந்து வெளியேறினார்.

Aug 06, 2024, 3:41 pm IST

ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

Aug 06, 2024, 3:15 pm IST

மல்யுத்தம்- மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை சுசாகியை வீழ்த்தி வினேஷ் போகட் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Aug 06, 2024, 12:21 pm IST

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் இன்று மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர் ஜப்பானின் யூயி சுசாகி-க்கு எதிராக முதல் சுற்றுப் போட்டியில் மோத உள்ளார். யூயி சுசாகி உலகின் முன்னணி மல்யுத்த வீராங்கனை ஆவார்.

Aug 06, 2024, 11:24 am IST

2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்று பதக்கப் பட்டியலில் 60-வது இடத்தில் உள்ளது.

Aug 06, 2024, 10:29 am IST

2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த நாடு 21 தங்கம், 30 வெள்ளி மற்றும் 28 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 79 பதக்கங்களை வென்றுள்ளது.

Aug 06, 2024, 9:32 am IST

இன்று இரவு 10.30 மணிக்கு இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதும் ஹாக்கி அரை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பதக்கம் உறுதியாகி விடும்.

Aug 06, 2024, 8:34 am IST

இந்திய மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா, வட கொரிய வீராங்கனையால் வேண்டுமென்றே காயப்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் அவர் நிஷாவை வீழ்த்தியதாகவும் இந்திய தேசிய மல்யுத்த பயிற்சியாளர் வீரேந்தர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

Aug 06, 2024, 7:32 am IST

ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் தடகளப் போட்டியில் ஹீட் 2 பிரிவில் இடம் பெற்ற இந்தியாவின் அவினாஷ் சேபிள் ஐந்தாவது இடம் பிடித்தார். முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் வீரர்கள் பதக்கச் சுற்றுக்கு முன்னேறுவார்கள். அதன் அடிப்படையில் அவினாஷ் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

Aug 05, 2024, 10:57 pm IST

2024 ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு மனு பாக்கருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் இந்த ஒலிம்பிக் தொடரில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்று இருக்கிறார்.

Aug 05, 2024, 9:56 pm IST

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் ஒருவர் கூட பதக்கம் வெல்லாததை அடுத்து பயிற்சியாளரும், முன்னாள் பேட்மிண்டன் வீரருமான பிரகாஷ் படுகோன் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இனியும் பதக்கம் வெல்லாததற்கு இந்திய பேட்மிண்டன் அமைப்பு மற்றும் இந்திய அரசை குறை கூற முடியாது. அவர்கள் அனைத்தையும் வழங்குகிறார்கள் என கூறி இருக்கிறார்.

Aug 05, 2024, 8:37 pm IST

மல்யுத்த விளையாட்டில் மகளிர் 68 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் நிஷா தஹியா அதிர்ச்சிகரமான முறையில் தோல்வி அடைந்தார்.

காலிறுதியில் நிஷா தஹியா 10-8 என்ற கணக்கில் வட கொரியாவின் சோல் கம் பாக்கிடம் தோற்றார். போட்டியின் இடையே அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு கடுமையான வலி இருந்தபோதிலும் தைரியமாக கடைசி வரை முயற்சித்தார் நிஷா. அவர் காயத்தால் அவதிப்பட்டபோது 8-2 என்ற முன்னிலையில் இருந்தார். பின்னர் தான் காயத்தால் தோற்று விடுவோம் என தெரிந்த போதும் போட்டியில் இருந்து விலகாமல், கடைசி வரை முயன்றார். இறுதியில் 10 - 8 என்ற கணக்கில் வடகொரிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

Aug 05, 2024, 8:00 pm IST

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் போதிய வசதி இல்லை என்று கூறி நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற இத்தாலி வீரர் தாமஸ் பூங்காவில் படுத்து தூங்கினார்

Aug 05, 2024, 7:18 pm IST

மலேசியா வீரர் லீ ஸி ஜியாவுக்கு எதிரான வெண்கலப் பதக்க போட்டியில் 21-13, 16-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தியாவின் லக்சயா சென் தோல்வியடைந்து சோகத்துடன் வெளியேறினார்

Aug 05, 2024, 7:18 pm IST

மல்யுத்தம் : மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவில் நிஷா தஹியா காலிறுதிக்கு தகுதி

Aug 05, 2024, 6:55 pm IST

துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிக்கான வெண்கலப் போட்டியில் சீனா 44 - 43 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய அணி நான்காவது இடத்தை மட்டுமே பிடித்து பதக்கத்தை இழந்தது.

Aug 05, 2024, 6:54 pm IST

பாரிஸ் ஒலிம்பிக்கில் உக்ரைன் நாட்டு வீராங்கனை யாரோஸ்லவா மஹுசிக் மைதானத்தில் குட்டி தூக்கம் போட்ட பிறகு, 2 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

Aug 05, 2024, 6:53 pm IST

துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பவெண்கலப் போட்டியில் இரண்டு சுற்றுகள் மீதமிருக்கும் நிலையில் இந்தியா 27, சீனா 28 புள்ளிகள் பெற்றுள்ளன. சீனா ஒரு புள்ளி முன்னிலையில் உள்ளது.

Aug 05, 2024, 6:29 pm IST

இன்று மாலை 6.30 மணிக்கு துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் மகேஸ்வரி சவுகான் மற்றும் அனந்த் ஜீத் சிங் நருகா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியில் சீனாவுக்கு எதிராக இந்திய அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Aug 05, 2024, 6:08 pm IST

பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மலேசியாவின் லீ ஸி ஜியாவை எதிர்த்து இந்தியாவின் லக்சயா சென் விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் வென்றால் பேட்மிண்டனில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்

Aug 05, 2024, 5:16 pm IST

இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ரோமானியாவை 3 - 2 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. ஆகஸ்ட் 7 அன்று நடைபெற உள்ள கால் இறுதிப் போட்டியில் இந்தியா பங்கேற்க உள்ளது.

Aug 05, 2024, 4:48 pm IST

துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் மகேஸ்வரி சவுகான் மற்றும் அனந்த் ஜீத் சிங் நருகா ஆகியோர் தகுதிச் சுற்றில் நான்காவது இடத்தைப் பிடித்ததால் வெண்கலப் பதக்கப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Aug 05, 2024, 4:10 pm IST

தடகளம் : மகளிர் 400 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை கிரண் முதல் சுற்றில் 7வது இடத்தை பிடித்தார்.

Aug 05, 2024, 3:07 pm IST

டேபிள் டென்னிஸ் : மகளிர் குழு பிரிவின் முதல் சுற்றில் ரொமேனியாவை இந்தியா 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. நட்சத்திர வீராங்கனை மணிக்கா பத்ரா வெற்றி

Aug 05, 2024, 1:56 pm IST

டேபிள் டென்னிஸின் மகளிர் இரட்டையர் பிரிவுக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா - அர்ச்சனா காமத் இணை ரொமேனியாவின் அடினா - சமாரா இணையை எதிர்த்து விளையாடி வருகிறது. முதல் 2 செட்டை இந்திய இணை கைப்பற்றிய நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 05, 2024, 12:42 pm IST

எனக்கு ஆஸ்துமா, அலர்ஜி, பதற்றம் மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது. எனினும் நான் வாழ்க்கையில் என்னவாக போகிறேன் என்பதை இந்த பிரச்சனைகள் எல்லாம் தடுக்காது. என்னால் முடிந்தால் உங்களால் ஏன் முடியாது- 100. மீ. ஓலிம்பிக் சாம்பியன் நோவா லைல்ஸ்

Aug 05, 2024, 11:32 am IST

2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 19 தங்கம், 26 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் வென்று 71 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சீனா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

Aug 05, 2024, 9:35 am IST

இன்று மாலை 6 மணிக்கு இந்தியாவின் லக்சயா சென் - மலேசியாவின் லீ ஜீ ஜியா மோதும் வெண்கலத்துக்கான போட்டி நடைபெற உள்ளது.

Aug 05, 2024, 8:52 am IST

இன்று ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் வெண்கலத்துக்கான போட்டியில் பங்கேற்க இருக்கிறார். அவர் பதக்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Aug 05, 2024, 8:05 am IST

ஒலிம்பிக் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 100 மீ ஓட்டப் பந்தயத்திற்கான இறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 100 மீட்டர் தூரத்தை 9.79 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Aug 05, 2024, 8:05 am IST

ஜமைக்காவின் தாம்சன் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரும் 9.79 நொடிகளில் தான் பந்தய தூரத்தை எட்டியுள்ளார். ஆனால் இருவருக்கும் இடையில் 0.784 நொடிகள் வித்தியாசம் இருந்ததால், தங்கப் பதக்கம் நோவா லைல்ஸ்-க்கு கிடைத்தது. 9.81 நொடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்த அமெரிக்காவின் கெர்லிக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 04, 2024, 10:50 pm IST

ஹாக்கி : ஆடவருக்கான காலிறுதி ஹாக்கியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து அபாரம்

Aug 04, 2024, 10:50 pm IST

ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறி இருக்கிறது.

Aug 04, 2024, 10:29 pm IST

உலகின் முன்னணி பளு தூக்குதல் வீராங்கனையான இந்தியாவின் மீராபாய் சானு பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தை வந்தடைந்தார். முன்னதாக அவர் பிரான்ஸில் தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரது போட்டிகள் ஆகஸ்ட் 7 அன்று தொடங்க இருக்கும் நிலையில் அவர் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்துக்கு வந்தார்.

Aug 04, 2024, 9:02 pm IST

ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற வயதான வீரர், 4 கிராண்ட் ஸ்லாம், ஒலிம்பிக் தங்கம் வென்ற 3வது டென்னிஸ் வீரர் என்ற சாதனைகளையும் ஜோகோவிச் படைத்து இருக்கிறார். 2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிறகு, தற்போது முதல் முறையாக தங்கம் கிடைத்திருக்கிறது.

Aug 04, 2024, 9:01 pm IST

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 9 நாட்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்று பதக்கப்பட்டியலில் 56வது இடத்தில் உள்ளது.

Aug 04, 2024, 8:39 pm IST

டென்னிஸ் : ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் தங்கம் வென்றார். ஸ்பெயின் வீரர் அல்காரஸ்க்கு வெள்ளி கிடைத்தது.

Aug 04, 2024, 8:25 pm IST

பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் மலேசிய ஜோடி ஆரோன் சியா, சூ வோ யிக் வெண்கலம் வென்றது

Aug 04, 2024, 7:34 pm IST

டென்னிஸ் : தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் அல்காரஸை எதிர்கொண்ட ஜோகோவிச் முதல் செட்டை 7க்கு6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

Aug 04, 2024, 6:53 pm IST

ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிக் - கார்லோஸ் அல்கராஸ் மோதி வருகின்றனர். இருவரும் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் என்பதால் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Aug 04, 2024, 5:51 pm IST

பேட்மிண்டன் அரையிறுதி சுற்றில் டென்மார்க் வீரர் விக்டர் அலெக்சென்-இடம் இந்தியாவின் லக்சயா சென் தோல்வி அடைந்தார். இதை அடுத்து லக்சயா சென் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

Aug 04, 2024, 5:38 pm IST

பாரிஸ் ஒலிம்பிக் - நீளம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த ஜேஸ்வின் ஆல்டீரின் தோல்வி. தகுதி சுற்றில் 26வது இடத்தை மட்டுமே பிடித்தார்

Aug 04, 2024, 5:15 pm IST

டென்னிஸ் : ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச், அல்காரஸ் இன்னும் சற்று நேரத்தில் மோதல்

Aug 04, 2024, 4:31 pm IST

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி. நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் டென்மார்க் வீரர் கிறிஸ்டினை எதிர்கொண்டு 22க்கு20, 21க்கு14 என்ற செட் கணக்கில் தோல்வி

Aug 04, 2024, 4:20 pm IST

குத்துச்சண்டை வீராங்கனை இமான் கலீஃபை ஆண் என்று சொல்வது தவறு - மருத்துவர் அப்துல்லா விளக்கம்

Aug 04, 2024, 3:37 pm IST

பேட்மிண்டன் அரையிறுதி சுற்றில் டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்செனை எதிர்த்து இந்தியாவின் லக்சயா சென் களமிறங்கியுள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய ஆடவர் பேட்மிண்டன் வரலாற்றில் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற வீரர் என்ற சாதனையை லக்சயா சென் படைப்பார்

Aug 04, 2024, 3:35 pm IST

மகளிர் குத்துச்சண்டை இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதியில் தோல்வி

Aug 04, 2024, 3:29 pm IST

மகளிர் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லோவ்லினா போர்ஹோகெய்ன், லி கியானிடம் தோல்வி அடைந்தார். இதை அடுத்து அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

Aug 04, 2024, 3:20 pm IST

இந்தியா - பிரிட்டன் இடையிலான காலிறுதி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் அரையிறுதிக்கு செல்வது யார் என்பதை முடிவு செய்ய ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. அதில் 2-2 என்ற இரு அணிகளும் சமமாக இருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் அடுத்த 2 ஷூட் அவுட்டையும் இந்தியாவின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்தார். தொடர்ந்து இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வென்றது.

Aug 04, 2024, 3:07 pm IST

ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - பிரிட்டன் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பதை முடிவு செய்வதற்காக ஷூட் அவுட் முறை பின்பற்றப்படவுள்ளது.

Aug 04, 2024, 2:35 pm IST

ஸ்டீப்லேசேஸ் : மகளிர் பிரிவில் 3000 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கனை பருல் சௌத்ரி தோல்வி

Aug 04, 2024, 2:26 pm IST

ஹாக்கி : ஆடவருக்கான இந்திய ஹாக்கி அணி காலிறுதியில் இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ்க்கு சிவப்பு அட்டை வழங்கியதால், இந்தியா 10 வீரர்களை வைத்து விளையாடுகிறது

Aug 04, 2024, 2:25 pm IST

ஹாக்கி : ஆடவருக்கான ஹாக்கி போட்டி காலிறுதியில் இந்தியா, பிரிட்டன் மோதிய ஆட்டத்தின் பாதி நேரம் ஸ்கோர் 1-1 என்ற நிலையில் உள்ளது.

Aug 04, 2024, 2:13 pm IST

பிரிட்டனுக்கு எதிரான ஹாக்கி காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதல் கோலை அடித்து அசத்தியுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் ஹர்மன்ப்ரீத் கவுர் அடிக்கும் 7வது கோல் இதுவாகும். இதன் மூலமாக இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

Aug 04, 2024, 1:34 pm IST

ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் இந்தியா - பிரிட்டன் இடையிலான ஆட்டம் தொடங்கியுள்ளது. இந்த இரு அணிகளும் டோக்கியோ ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் மோதிய போது, இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதனால் மீண்டும் இந்திய அணி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 04, 2024, 1:06 pm IST

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தோனேஷியா வீராங்கனை துன் ஜுனை 11-21, 21-13 மற்றும் 21-16 என்ற செட் கணக்கில் நம்பர் 1 வீராங்கனை ஆன் சே யன் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்

Aug 04, 2024, 12:27 pm IST

டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான தங்கப் பதக்க போட்டியில் நட்சத்திர வீரர்களான அல்காரஸ் மற்றும் ஜோகோவிச் மோதுகின்றனர். இந்த ஆட்டம் மாலை 4.45 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக ஜோகோவிச் ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

Aug 04, 2024, 11:05 am IST

குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவில் நடக்கவுள்ள காலிறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனை லல்வினா போர்கோஹைன் விளையாடவுள்ளார்

Aug 04, 2024, 10:10 am IST

இன்று பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் மற்றும் டென்மார்க்கின் விக்டர் அக்சல்சன் இடையிலான ஆட்டம் மதியம் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

Aug 04, 2024, 9:22 am IST

இன்று ஹாக்கி காலிறுதிப் போட்டியில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்கு துவங்கும்.

Aug 04, 2024, 8:06 am IST

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு மனு பாக்கருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற நிலையில் அவருக்கு இந்த கவுரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

Aug 03, 2024, 11:37 pm IST

ஒலிம்பிக் தொடரின் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் சீனா முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. குரோஷியா வீராங்கனை டோனா வெகிக்கை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷெங் வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றி அசத்தினார்

Aug 03, 2024, 10:21 pm IST

ஒலிம்பிக் தொடரில் அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை இமான் கலீஃப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஹங்கேரியைச் சேர்ந்த லூகா அன்னா ஹமோரியை 5-0 என்ற புள்ளிகளில் வீழ்த்திய இமான் கலீஃப், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலமாக அவருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது

Aug 03, 2024, 9:20 pm IST

அமெரிக்கா ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் ஒலிம்பிக் தொடரில் தனது 7வது தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

Aug 03, 2024, 8:14 pm IST

ஒலிம்பிக்கில் இந்திய அணி பங்கேற்றுள்ள 16 விளையாட்டுகளில் வில்வித்தை, டென்னிஸ், ஜூடோ, படகோட்டுதல், நீச்சல் மற்றும் குதிரையேற்றம் ஆகிய 6 விளையாட்டுகளில் இருந்து இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது

Aug 03, 2024, 7:03 pm IST

2024 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் போதிய காற்றோட்ட வசதி இல்லாமல் ஓய்வு எடுக்க சிரமப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து ஃபிரான்சில் உள்ள இந்திய தூதரகம் 40 எளிதில் நகர்த்தக் கூடிய குளிர் சாதனப் பெட்டிகளை (Portable Air Conditioner) வாங்கி உள்ளது. நேற்று அந்த குளிர் சாதனப் பெட்டிகள் இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான செலவை ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா ஏற்றுள்ளது.

Aug 03, 2024, 6:20 pm IST

துப்பாக்கிச் சுடுதல் : ஆடவருக்கான ஸ்கிட் பிரிவின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனான்ட ஜீட் 24வது இடத்தை பிடித்து தோல்வி

Aug 03, 2024, 6:01 pm IST

டென்னிஸ் : ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் மேத்தீவ் எப்டன், ஜான் பீர்ஸ் ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது.

Aug 03, 2024, 5:31 pm IST

வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். இந்த போட்டியில் 19 வயதான தென் கொரியாவின் நாம் சு-விடம் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் தீபிகா குமாரி தோல்வியடைந்தார்.

Aug 03, 2024, 5:07 pm IST

வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் தென் கொரியாவின் நாம் சு-ஹையனை எதிர்த்து இந்தியாவின் தீபிகா குமாரி களமிறங்கியுள்ளார்

Aug 03, 2024, 4:43 pm IST

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் இந்தியா 47வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.

Aug 03, 2024, 4:06 pm IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் பிரிவு, வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் துப்பாக்கிச் சுடுதல் 25 மீ பிஸ்டல் பிரிவு ஆகியவற்றில் 4வது இடத்தில் நிறைவு செய்ததால் 3 பதக்கங்களை இந்தியா நூலிழையில் இழந்துள்ளது.

Aug 03, 2024, 3:26 pm IST

வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டியில் இந்தியாவின் தீபிகா குமார் மாலை 5.10 மணியளவில் களமிறங்கவுள்ளார். இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Aug 03, 2024, 2:45 pm IST

வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தோனேஷியா வீராங்கனையிடம் தோல்வியடைந்து இந்தியாவின் பஜன் கவுர் வெளியேறி இருக்கிறார். 5-5 என்ற புள்ளிகள் இருந்த நிலையில், ஷூட் அவுட் முறையில் தோல்வியடைந்து பஜன் கவுர் வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Aug 03, 2024, 2:19 pm IST

வில்வித்தையில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் மிட்சல் க்ரோப்பனை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்

Aug 03, 2024, 1:58 pm IST

வில்வித்தையில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் மிட்சல் க்ரோப்பனை எதிர்த்து இந்தியாவின் சீனியர் வீராங்கனை தீபிகா குமாரி இன்னும் சற்று நிமிடங்களில் களமிறங்கவுள்ளார்

Aug 03, 2024, 1:24 pm IST

துப்பாக்கி சுடுதல் மகளிர் 25மீ பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் நான்காவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

Aug 03, 2024, 1:11 pm IST

துப்பாக்கி சுடுதல் மகளிர் 25மீ பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் அபாரமாக செயல்பட்டு இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

Aug 03, 2024, 12:59 pm IST

மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரைசா தில்லான், மகேஷ்வரி சவுஹான் ஸ்கீட் தகுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளனர்.

Aug 03, 2024, 11:09 am IST

2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்திலும், பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சீனா 13 தங்கம், 9 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் வென்று இருக்கிறது. பிரான்ஸ் 11 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் வென்று உள்ளது.

Aug 03, 2024, 9:53 am IST

2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா 47வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது.

Aug 03, 2024, 8:39 am IST

இன்று மதியம் 12:30 மணிக்கு துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பெண்கள் தகுதிச் சுற்று போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்தியாவின் ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான் பங்கேற்க உள்ளனர்.

Aug 03, 2024, 7:59 am IST

இன்று மதியம் 1 மணி அளவில் துப்பாக்கி சுடுதல் 25 மீ பிஸ்டல் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் மனு பாக்கர் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே, அவர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற நிலையில் இந்த முறையும் பதக்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Aug 03, 2024, 12:37 am IST

குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சோகத்துடன் வெளியேறினார்

Aug 02, 2024, 11:51 pm IST

ரோயிங்: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் பால்ராஜ் பன்வார் 23வது இடத்தைப் பிடித்தார். ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் இறுதிப் போட்டியில் பால்ராஜ் பன்வார் 7:02.37 வினாடிகளில் 5வது இடத்தைப் பிடித்து ஒட்டுமொத்தமாக 23வது இடத்தைப் பிடித்தார். அதன் மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

Aug 02, 2024, 10:28 pm IST

ஒலிம்பிக் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் லக்சயா சென். சீன வீரருக்கு எதிரான காலிறுதி போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வென்று சாதித்துள்ளார்

Aug 02, 2024, 10:08 pm IST

பேட்மிண்டர் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் செளடியன் சென்-ஐ எதிர்த்து இந்திய வீரர் லட்சகா சென் விளையாடி வருகிறார். முதல் செட்டை சீன வீரர் கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை லக்சயா சென் 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியுள்ளார்

Aug 02, 2024, 9:14 pm IST

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லட்சயா சென் மற்றும் சீனாவின் செளடியன் சென் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் வென்றால் இந்தியாவின் லட்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறுவார்.

Aug 02, 2024, 8:13 pm IST

வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவுக்கான வெண்கலப் பதக்க போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. இதில் 6-2 என்ற கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தியாவின் அங்கிதா பகத் - தீரஜ் பொம்மதேவரா இணை கண்ணீருடன் களம்விட்டு வெளியேறினர்.

Aug 02, 2024, 8:00 pm IST

வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவுக்கான வெண்கலப் பதக்க போட்டியில் இந்தியா - அமெரிக்கா களமிறங்கியுள்ளது. இந்தியாவின் தீரஜ் மற்றும் அங்கிதா இருவரும் வெண்கலப் பதக்கத்தை வெல்ல தீவிரமாக உள்ளனர்.

Aug 02, 2024, 7:45 pm IST

வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி சுற்றில் தென் கொரியா உடன் இந்தியா தோல்வி

Aug 02, 2024, 7:36 pm IST

வில்வித்தை கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தீரஜ் - அங்கிதா இணை அரையிறுதியில் தென் கொரியா இணையிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் களமிறங்கவுள்ளது.

Aug 02, 2024, 6:48 pm IST

இந்திய கலப்பு வில்வித்தை போட்டியில் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கிதா பகத் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இவர்கள் கால் காலிறுதியில் 5 - 3 என ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

Aug 02, 2024, 6:29 pm IST

2024 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி "பி" பிரிவில் 3 - 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை ஐந்து போட்டிகளில் பங்கேற்று 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

Aug 02, 2024, 5:10 pm IST

மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை மனு பாக்கர் தகுதி

Aug 02, 2024, 5:09 pm IST

மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 25 மீ பிஸ்டல் பிரிவின் ரேபிட் சுற்றில் மனு பாக்கர் தற்போது வரை இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த சுற்றில் முதல் எட்டு இடங்களை பிடித்தால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.

Aug 02, 2024, 4:25 pm IST

ஹாக்கியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி குரூப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. பரம எதிரிகளான இந்தியா - ஆஸ்திரேலியா மோதுவதால், யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Aug 02, 2024, 4:22 pm IST

துப்பாக்கிச் சுடுதலில் 25 மீ பிஸ்டல் பிரிவின்ரேபிட் சுற்றில் ஈஷா சிங் பின்னடைவை சந்தித்தார். அவர் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Aug 02, 2024, 3:36 pm IST

துப்பாக்கிச் சுடுதலில் 25 மீ பிஸ்டல் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் ஈஷா சிங் இருவரும் 3 மற்றும் 10 ஆகிய இடங்களில் நிறைவு செய்துள்ளனர். தற்போது ரேபிட் சுற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாப் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள்.

Aug 02, 2024, 2:24 pm IST

ஜூடோவில் மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் துலிகா மான் தோல்வியடைந்துள்ளார். முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான க்யூபாவின் ஓர்டிஸை எதிர்கொண்ட துலிகா மான் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து சோகத்துடன் வெளியேறி இருக்கிறார்

Aug 02, 2024, 1:34 pm IST

வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தோனேஷியா இணையை 5-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் அன்கிதா - தீரஜ் இணை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Aug 02, 2024, 1:18 pm IST

வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அன்கிதா - திராஜ் பொம்மதேவரா இணை களமிறங்கியுள்ளது.

Aug 02, 2024, 12:39 pm IST

துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டி மட்டுமே ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமா செயலியில் ஒளிபரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனவே, துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்றை நேரலையில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Aug 02, 2024, 11:59 am IST

இன்று துப்பாக்கி சுடுதலில் மகளிர் பிரிவில் மனு பாக்கர் பங்கேற்க உள்ளார். அவர் ஏற்கனவே இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது போட்டியில் பங்கேற்க உள்ளார். பெண்கள் 25 மீ பிஸ்டல் அணிப் பிரிவு தகுதி போட்டியில் பங்கேற்க உள்ளார்.

Aug 02, 2024, 11:59 am IST

மதியம் 12:30: துப்பாக்கி சுடுதல் - பெண்கள் 25 மீ பிஸ்டல் தகுதி - மனு பாக்கர், இஷா சிங்

Aug 02, 2024, 11:57 am IST

குத்துச்சண்டை மகளிருக்கான 66 கிலோ எடைப் பிரிவில் பாலின சோதனையில் தோல்வி அடைந்த அல்ஜெரீய வீராங்கனை இமான் கலிஃப்க்கு வாய்ப்பு வழங்கியதற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்

Aug 02, 2024, 10:40 am IST

2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. சீனா இதுவரை 11 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் வென்று இருக்கிறது. அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 9 தங்கம், 15 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் வென்று இருக்கிறது.

Aug 02, 2024, 9:57 am IST

2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது. ஒலிம்பிக் தொடரின் ஏழாம் நாளான இன்று இந்தியா நான்காவது பதக்கத்தை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Aug 01, 2024, 11:07 pm IST

கடந்த 2 ஒலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்ற பிவி சிந்து, இம்முறை தோல்வி அடைந்து சோகத்துடன் வெளியேற்றம்

Aug 01, 2024, 11:06 pm IST

மகளிர் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீராங்கனை ஹிங் பின்ஜாவ் உடன் 19க்கு21, 14க்கு21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி

Aug 01, 2024, 9:19 pm IST

பேட்மிண்டன் : ஆடவர் ஒற்றையர் பிரிவில் சக இந்திய வீரர் பிரனாயை வீழ்த்தி லக்சா சென் காலிறுதிக்கு தகுதி

Aug 01, 2024, 9:17 pm IST

டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் அல்காரஸ் தகுதி பெற்றுள்ளார்.

Aug 01, 2024, 6:38 pm IST

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் பிரனாய் ராயை 21-12, 21-6 என்ற செட் கணக்கில் வீழ்த்திய சக இந்தியரான லக்சயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்

Aug 01, 2024, 5:15 pm IST

மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பி பிரிவில் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சம்ரா மற்றும் அன்ஜூம் மவுட்கல் ஆகியோர் தோல்வி

Aug 01, 2024, 4:37 pm IST

குத்துச்சண்டை : மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஷரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி

Aug 01, 2024, 4:34 pm IST

மகளிருக்கான 20 கிமீ. மெதுவான ஓட்டப்பந்தயம் - இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி 41 இடத்தை மட்டுமே பிடித்து வெளியேறினார்.

Aug 01, 2024, 4:32 pm IST

ஹாக்கி - இந்திய ஆடவர் அணி, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுடன் 2க்கு1 என்ற கோல் கணக்கில் தோல்வி

Aug 01, 2024, 3:11 pm IST

ஹாக்கியில் பெல்ஜியம் அணிக்கு எதிரான குரூப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது

Aug 01, 2024, 1:58 pm IST

தோனியை போல் ஸ்வப்னலும் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்தவர்

Aug 01, 2024, 1:55 pm IST

துப்பாக்கி சுடுதல் ஆடவருக்கான 50மீ. ரைபிள் 3பி பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னல் வெண்கலம் வென்றார். இது இந்தியா வெல்லும் 3வது பதக்கமாகும்

Aug 01, 2024, 1:51 pm IST

துப்பாக்கிச் சுடுதலில் 50 மீ ரைபிள் 3 பி போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக இந்தியா ஒலிம்பிக் தொடரில் 3வது பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

Aug 01, 2024, 11:20 am IST

ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 வெண்கல பதக்கத்தை வென்றுள்ள நிலையில், 3வது பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு அமைந்துள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் 50 மீ ரைபிள் 3 பி போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே விளையாடவுள்ளார்.

Aug 01, 2024, 9:05 am IST

உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் சுன் யிங்ஷாவை எதிர்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா மோதினார். இதில் 5-0 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்து வெளியேறினார். இந்த தோல்வியுடன் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் பதக்க கனவு முடிவுக்கு வந்துள்ளது.

Jul 31, 2024, 9:33 pm IST

மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா மற்றும் ஜப்பான் வீராங்கனை ஹிரானோ மோதினர். இதில் 1-4 என்ற செட் கணக்கில் ஹிரானோவிடம் தோல்வியடைந்து மணிகா பத்ரா வெளியேறினார்.

Jul 31, 2024, 5:58 pm IST

மகளிருக்கான வில்வித்தையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்து வீராங்கனை ரொஃபீனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனையான பஜன் கவுரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Jul 31, 2024, 4:52 pm IST

பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் நார்வே குத்துச்சண்டை வீராங்கனை சன்னிவா ஹோஃப்ஸ்டாட்டை, இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் வீழ்த்தினார். இதன் மூலம், அவர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Jul 31, 2024, 3:29 pm IST

மகளிருக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சிங்கப்பூர் வீராங்கனை ஜியான் செங்கை எதிர்த்து விளையாடிய ஸ்ரீஜா அகுலா 9-11, 12-10, 11-4, 11-5, 10-12, 12-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக மணிகா பத்ராவுக்கு பின் ஒலிம்பிக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய 2வது இந்தியர் என்ற பெருமையை ஸ்ரீஜா பெற்றுள்ளார்

Jul 31, 2024, 2:55 pm IST

2024 ஒலிம்பிக் தொடரில் ஸ்வப்னில் குசலே ஆடவர் ரைபிள் 50மீ 3பி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். குசலே தனது 60 ஷாட்களின் எண்ணிக்கையை 590 புள்ளிகளுடனும், 38 இன்னர் 10களுடனும் முடித்தார். அதன் மூலம் அவர் முதல் எட்டு இடங்களுக்குள் இடம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

Jul 31, 2024, 2:54 pm IST

ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் குரூப் போட்டியில் இந்தோனேஷியாவின் ஜானத்தன் கிறிஸ்டியை வீழ்த்தி இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் சாதித்துள்ளார். உலக பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர் 3 வீரரான ஜானத்தன் கிறிஸ்டியை 21-18, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்த்தி லக்‌ஷ்யா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Jul 31, 2024, 1:53 pm IST

மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் குரூப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். எஸ்டோனியா வீராங்கனை கிறிஸ்டின் கூபாவை 21-5, 21 - 10 என்ற நேர் செட்களில் பிவி சிந்து வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 34 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Jul 31, 2024, 1:50 pm IST

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான குரூப் போட்டியில் எஸ்டோனியாவைச் சேர்ந்த கிறிஸ்டின் கூபாவை எதிர்த்து இந்தியாவின் பிவி சிந்து விளையாடி வருகிறார். இந்த போட்டியில் வென்றால், பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Jul 31, 2024, 12:14 pm IST

பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா இனி ஒலிம்பிக் தொடர்களில் விளையாடப் போவதில்லை எனக் கூறி தனது ஓய்வை அறிவித்தார். 34 வயதாகும் அவர் 2024 ஒலிம்பிக் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு குரூப் சுற்றில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த முடிவை அறிவித்தார்.

Jul 31, 2024, 8:07 am IST

இந்தியா இதுவரை 2024 ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இன்று பதக்கத்துக்கான ஒரு முக்கிய போட்டி நடைபெற உள்ளது. படகோட்டுதலில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார் அரை இறுதியில் பங்கேற்க உள்ளார். இதில் அவர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகி விடும்.

Jul 30, 2024, 9:53 pm IST

ஆண்களுக்கான 51 கிலோ குத்துச்சண்டை ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் ஜாம்பியாவின் பேட்ரிக் சின்யெம்பா 4:1 என்ற புள்ளிகளில் இந்தியாவின் அமித் பங்காலை வீழ்த்தினார்.

Jul 30, 2024, 7:51 pm IST

பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் "சி" பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ ஜோடி 15-21, 10-21 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் செட்யானா மபாசா மற்றும் ஏஞ்சலா யூ ஜோடியிடம் தோல்வியடைந்தது. இந்த இந்திய ஜோடி தனது பிரிவில் ஆடிய போட்டிகளில் மூன்று தோல்விகளுடன் குரூப் சியில் நான்காவது இடத்தைப் பிடித்தது.அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

Jul 30, 2024, 7:49 pm IST

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஹாக்கி அணி 2 - 0 என வெற்றி பெற்றது. தான் இடம் பெற்று இருக்கும் குரூப் பி பிரிவில் மூன்று போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகள் பெற்றுள்ளது இந்திய அணி.

Jul 30, 2024, 5:05 pm IST

துப்பாக்கிச் சுடுதல் - ஆடவருக்கான டிராப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் 21வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவில்லை

Jul 30, 2024, 1:24 pm IST

மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்

Jul 30, 2024, 1:21 pm IST

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது.

Jul 30, 2024, 1:06 pm IST

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான துப்பாக்கிச் சுடுதலின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் களமிறங்கியுள்ளது.

Jul 30, 2024, 8:37 am IST

இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா இந்தியாவுக்காக டென்னிஸ் ஆடுவதில் இருந்து ஓய்வை அறிவித்தார். அவருக்கு 43 வயது ஆகிறது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றதே இந்தியாவுக்காக தான் ஆடிய கடைசி போட்டி என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Jul 30, 2024, 8:37 am IST

துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், சர்போஜித் சிங் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மற்ற போட்டிகள் அனைத்தும் தகுதிச் சுற்றுப் போட்டிகளாகவும், குரூப் சுற்று போட்டிகளாகவும் நடைபெற உள்ளன.

Jul 30, 2024, 8:36 am IST

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் நான்காம் நாளான இன்று இந்திய வீரர்கள் துப்பாக்கி சுடுதல், படகோட்டுதல், ஹாக்கி, வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களில் பங்கேற்க உள்ளனர்.

Jul 29, 2024, 7:11 pm IST

ஆண்கள் குழு வில்வித்தை கால் இறுதிப் போட்டியில் துருக்கி அணிக்கு எதிராக இந்திய அணி 2 - 6 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தது.

Jul 29, 2024, 6:25 pm IST

ஆண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் விளையாட்டில் "எல்" பிரிவில் நடந்த போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென் 21-19, 21-16 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கியை வீழ்த்தினார்.

Jul 29, 2024, 5:59 pm IST

ஹாக்கி : இந்திய ஆடவர் அணி , அர்ஜென்டினா உடன் மோதிய ஆட்டம் 1க்கு1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

Jul 29, 2024, 4:44 pm IST

ஆடவர் ஹாக்கி விளையாட்டில் குரூப் "பி" பிரிவில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதி வருகின்றன. முன்னதாக இந்தியா நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி வென்றால் குரூப் பி பிரிவின் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேற முடியும்.

Jul 29, 2024, 4:04 pm IST

ஆடவருக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா 4வது இடத்தில் நிறைவு செய்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்

Jul 29, 2024, 1:52 pm IST

பேட்மிண்டன் : மகளிர் இரட்டையர் பிரிவில் லீக் சுற்றின் 2வது ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி போன்னப்பா, தனிஷா ஜோடி தோல்வி

Jul 29, 2024, 1:52 pm IST

10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மனு பாக்கர், சரபோஜித் குழு தகுதி. வெறும் 0.2 புள்ளிகளில் தங்கம், வெள்ளி பதக்கம் வெல்ல தகுதி பெறும் வாய்ப்பு பறிப்போனது.

Jul 29, 2024, 1:19 pm IST

துப்பாக்கிச் சுடுதல் : மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிந்தல் பைனலில் 7வது இடத்தை மட்டுமே பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்

Jul 29, 2024, 1:07 pm IST

துப்பாக்கிச் சுடுதல் : மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிந்தல் பைனலில் களமிறங்கி உள்ளார்

Jul 29, 2024, 12:00 pm IST

மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றதை அடுத்து இரண்டாம் நாளின் முடிவில் இந்தியா பதக்கப் பட்டியலில் 22வது இடத்தில் உள்ளது. இந்தியா ஒரு வெண்கலப் பதக்கம் மட்டும் வென்று இருக்கிறது.

Jul 28, 2024, 9:29 pm IST

மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீன் ரவுண்ட் ஆஃப் 32- வில் வெற்றி பெற்று, ரவுண்ட் ஆஃப் 32 - வுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான சீனாவின் வூ யூ-வை சந்திக்க உள்ளார்.

Jul 28, 2024, 9:29 pm IST

ஆடவர் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் முன்னணி வீரர் சரத் கமல் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.

Jul 28, 2024, 9:29 pm IST

நீச்சல் விளையாட்டில் மகளிர் பிரிவில் இந்தியாவின் தீநிதி தேசிங்கு 23வது இடத்தையும், ஆடவர் பிரிவில் ஸ்ரீஹரி நடராஜ் 33வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

Jul 28, 2024, 9:28 pm IST

மகளிர் வில்வித்தை விளையாட்டில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 0 - 6 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து அரை இறுதி முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

Jul 28, 2024, 9:28 pm IST

டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தியா சார்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் மட்டுமே இடம் பெற்று இருந்தார். அவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கொரெண்டின் மௌடெட்டிடம் தோல்வி அடைந்தார்.

Jul 28, 2024, 9:28 pm IST

மகளிர் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் மணிகா பத்ரா முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Jul 28, 2024, 9:28 pm IST

ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் குரூப் K போட்டியில் எச்.எஸ்.பிரணாய் மற்றும் ஃபேபியன் ரோத் மோதினர். இதில் பிரணாய் 21 - 18, 21 - 12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Jul 28, 2024, 4:04 pm IST

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றார். 221.7 புள்ளிகள் பெற்று 22 வயதான மனு பாக்கர் சாதனை. ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை

Jul 28, 2024, 2:11 pm IST

மகளிருக்கான 10மீ. ஏர் ரைபில் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்றில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தகுதி பெறவில்லை. மற்றொரு இந்திய வீராங்கனை ரமிதா ஜிந்தால் தகுதி

Jul 28, 2024, 1:34 pm IST

படகு போட்டி : ஆடவருக்கான தனி நபர் படகு போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் காலிறுதிக்கு தகுதி

Jul 28, 2024, 1:34 pm IST

துடுப்புப் படகு போட்டியில் ரெப்பிகேஜ் சுற்றில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 2வது இடத்தை பிடித்து 7 நிமிடங்கள் 12 நொடிகளில் பந்தய தூரத்தை எட்டி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். துடுப்புப் படகு விளையாட்டில் ஒலிம்பிக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பல்ராஜ் பன்வார் படைத்துள்ளார்

Jul 28, 2024, 1:29 pm IST

மகளிருக்கான 10மீ. ஏர் ரைபில் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்றில் தமிழக வீராங்கனை இளவேனில் வாளறிவன் 2வது இடத்தில் இருப்பதால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு

Jul 28, 2024, 1:29 pm IST

பேட்மிண்டன் - மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி. தரவரிசையில் 111வது இடத்தில் இருந்த வீராங்கனையை 21க்கு9, 21க்கு6 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி

Jul 28, 2024, 1:29 pm IST

பாரிஸ் ஒலிம்பிக்கின் 2வது நாளில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தனது முதல் சுற்று போட்டியில் மாலத்தீவைச் சேர்ந்த ஃபாதீமாத்-ஐ எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 21-9 என்று கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை 21-6 என்று கைப்பற்றி வென்றார். 30 நிமிடங்களுக்குள் இந்த ஆட்டம் முடிவடைந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Jul 28, 2024, 1:08 pm IST

பேட்மிண்டன் - மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து தனது முதல் போட்டியில் பங்கேற்பு

Jul 28, 2024, 1:08 pm IST

மகளிருக்கான 10மீ. ஏர் ரைபில் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்றில் தமிழக வீராங்கனை இளவேனில் வாளறிவன் பங்கேற்பு

Jul 28, 2024, 1:08 pm IST

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மானு பாக்கர் பங்கேற்பு. இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

Jul 27, 2024, 10:43 pm IST

ஒலிம்பிக் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. ஆட்டம் முடிய 8 நிமிடங்கள் இருந்த போது நியூசிலாந்து அணி கோல் அடித்து 2-2 என்று சமன் செய்திருந்தது. அதன்பின் கடைசி 2 நிமிடத்திற்கு முன் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதில் இந்திய அணி கோல் அடிக்க 3-2 என்ற கணக்கில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது

Jul 27, 2024, 9:03 pm IST

ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டனுக்கான ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி கூட்டணியை எதிர்த்து பிரான்ஸ் நாட்டின் கார்வி - லாபர் அணி விளையாடியது. இதில் ஒலிம்பிக்கை நடத்தும் பிரான்ஸ் அணியை 21-17 மற்றும் 21-14 என்ற செட் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி வென்றுள்ளது.

Jul 27, 2024, 8:13 pm IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அபார வெற்றியை பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் அரையிறுதி சுற்றில் விளையாடிய கெவின் கார்டனை 21-8 மற்றும் 22-20 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வீழ்த்தி அசத்தினார்.

Jul 27, 2024, 5:34 pm IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நிறைவு செய்துள்ளார். இதன் மூலமாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று மனு பாக்கர் அசத்தியுள்ளார்.

Jul 27, 2024, 3:02 pm IST

10 மீ ஏர் ரைபிள் இரட்டையர் கலப்பு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீனா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. தென் கொரியா, சீனா அணிகள் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் மோதின. இதில் 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் சீனா முதல் தங்கத்தை வென்று சாதித்துள்ளது

Jul 27, 2024, 1:43 pm IST

சீனா (632.2), கொரியா (631.4), கஜகஸ்தான் (630.8), மற்றும் ஜெர்மனி (629.7) 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்தியா 1 அணி 626.3 புள்ளிகளுடன் 12வது இடமும் மற்றும் இந்தியா 2 அணி 628.7 புள்ளிகளுடன் 6வது இடத்தையும் பிடித்தன.

Jul 27, 2024, 1:43 pm IST

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த இரண்டு அணிகள் பங்கேற்ற நிலையில், அவை 6 மற்றும் 12வது இடங்களையே பிடித்தன. தகுதிப் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்திய அணிகள் தகுதிப் போட்டியுடன் வெளியேறின.

Jul 27, 2024, 12:25 pm IST

இன்று (ஜூலை 27) மதியம் 12.30 மணி அளவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த இரண்டு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தியா 2 அணியில் ரமிதா ஜிண்டால், அர்ஜுன் பாபுதா பங்கேற்க உள்ளனர். இந்தியா 1 அணியில் இளவேனில் வளரிவன், சந்தீப் சிங் பங்கேற்க உள்ளனர். அடுத்து 12.30 மணிக்கு படகோட்டுதல் ஆண்கள் ஒற்றை ஸ்கல்ஸ் ஹீட்ஸ் போட்டியில் பால்ராஜ் பன்வார் பங்கேற்க உள்ளார்.

Jul 27, 2024, 8:08 am IST

மதியம் 2 மணிக்கு 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய சார்பாக கலப்பு இரட்டையர் பிரிவில் சந்தீல், இளவேனில் மற்றும் பபுடா, ரமனிடா கூட்டணி பங்கேற்க உள்ளது. இதன் மூலமாக இந்தியா முதல் நாளிலேயே பதக்கம் வெல்ல வாய்ப்புகள் உள்ளது

Jul 27, 2024, 12:07 am IST

கடும் மழைக்கு நடுவே படகு அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதை அடுத்து 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் சரியாக திட்டமிடப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

Jul 26, 2024, 11:40 pm IST

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் துவக்க விழாவில் பிவி சிந்து மற்றும் சரத் கமல் இந்திய தேசிய கொடியை ஏந்திய நிலையில் படகு அணிவகுப்பில் இடம் பெற்றனர். நூற்றுக்கணக்கான படகுகளின் மத்தியில் இந்திய வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று இருந்த படகும் அணிவகுத்து சென்றது.

Jul 26, 2024, 11:19 pm IST

முதல் ஒலிம்பிக் தொடர் கிரீஸ் நாட்டில் நடைபெற்றதால், ஒலிம்பிக் தொடக்க விழா பேரணியில் எப்போதும் முதல் அணியாக கிரீஸ் நாட்டு வீரர்கள், வீராங்கனைகளே தேசியக் கொடியை ஏந்தி செல்வர். அதேபோல் இம்முறையும் கிரீஸ் நாட்டு வீரர்கள் படகில் அணிவகுத்து சென்றனர்

Jul 26, 2024, 11:11 pm IST

பாரிஸ் நகரின் செய்ன் ஆற்றில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பிரம்மாண்ட துவக்க விழா தொடங்கியது. சுமார் 100 படகுகளில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளது.

Jul 26, 2024, 10:34 pm IST

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் துவக்க விழாவில் பிவி சிந்து மற்றும் சரத் கமல் இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர். இந்திய வீரர்கள் அனைவரும் வெள்ளை நிற குர்தாவும், இந்திய வீராங்கனைகள் அனைவரும் வெளிர் சந்தன நிற சேலையில் இந்திய தேசிய கொடியின் வண்ணங்கள் இடம் பெறும் வகையிலும் உடை அணிந்து உள்ளனர்.

Jul 26, 2024, 9:30 pm IST
Mykhel

ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு தயாரான இந்திய பேட்மிண்டன் வீரர்கள், வீராங்கனைகள்

Jul 26, 2024, 5:19 pm IST

2024 ஒலிம்பிக் துவக்க விழாவை காண ஆற்றங்கரையோரம் சுமார் 3,26,000 பார்வையாளர்களுக்கு டிக்கெட் விநியோகிக்கப் பட்டு இருக்கிறது. அதில் 222,000 டிக்கெட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Jul 26, 2024, 5:18 pm IST

இன்று இரவு 11 மணிக்கு (இந்திய நேரப்படி) 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் துவங்க உள்ளது. பாரிஸில் உள்ள செய்ன் ஆற்றில் துவக்க விழா அணிவகுப்பு நடைபெற உள்ளது. சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சுமார் 100 படகுகளில் அணிவகுத்து செல்ல உள்ளனர்.

Jul 26, 2024, 11:51 am IST

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் இருவரும் தேசியக் கொடியை ஏந்தி தொடக்க விழா பேரணியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகளை வழிநடத்தவுள்ளனர்

Jul 25, 2024, 4:34 pm IST

பாரீஸ் ஒலிம்பிக் - வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்ம்

Jul 25, 2024, 3:15 pm IST

கால்பந்து : அர்ஜென்டின அணியை 2க்கு 1 என்ற கோல் கக்கில் மொராகோ அணி வீழ்த்தியது.

Jul 25, 2024, 3:14 pm IST

வில்வித்தை : தனிநபர் தரவரிசையை நிர்ணயிக்கும் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, பாஜன், அங்கிதா ஆகியோர் களமிறங்குகின்றனர். இதில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி பெறுவர்கள்

Story first published: Thursday, July 25, 2024, 15:13 [IST]
Other articles published on Jul 25, 2024
English summary
Paris 2024 Olympics Live (August 10) News Updates in Tamil : ஒலிம்பிக் 2024 தமிழ் அப்டேட்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+