For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் -1984 முதல் 12 ஆண்டுகள் இந்தியாவுக்கு சோக காலம்.. 1996-க்கு பின் மாறிய வரலாறு

பாரிஸ் : 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியா இதுவரை ஒலிம்பிக் தொடரில் மொத்தமாகவே 35 பதக்கங்களை தான் வென்றிருக்கிறது. சீனாவைத் தவிர மற்ற தெற்காசிய நாடுகள் ஒலிம்பிக்கில் தடுமாறும் நிலையில் இந்தியா ஒரு அளவுக்கு நன்றாகவே செயல்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இந்தியா எப்படியாவது ஒரு பதக்கத்தையாவது வென்று இடம்பெற்று விடும். ஆனால் இந்தியாவுக்கு 1984 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் இந்திய அணி ஒரு முறை கூட ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்காமல் இருந்தது.

Paris Olympics 2024 2024 india contigent

இந்த காலகட்டத்தில் இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். 1996 ஆம் ஆண்டு தான் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் யாருமே எதிர்பாராத வகையில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவின் ஏக்கத்தை தீர்த்தார். லியான்டர் பயஸின் இந்த சாதனை இந்தியாவுக்கு அதன் பிறகு ஒரு புதிய வரலாற்றை எழுதி தந்தது.

அதன் பிறகு நடைபெற்ற அனைத்து ஒலிம்பிக்கிலும் இந்தியா குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது வென்றுவிடும். 2000 ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு வெண்கலத்தையும், 2004 ஆம் ஆண்டு ஏத்தன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் முறையாக தனிப்பட்ட பிரிவில் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கத்தை வென்று மூன்று பதக்கத்தை கைப்பற்றியது. 2012 ஆம் ஆண்டு இந்தியா இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஆறு பதக்கத்தை கைப்பற்றியது.

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் என இரண்டு பதக்கத்தை இந்தியா தட்டிச் சென்றது .இதேபோன்று 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் 2 வெள்ளி 4 வெண்கலம் என ஏழு பதக்கங்களுடன் 48வது இடத்தில் நிறைவு செய்தது.

இந்தியாவுக்கு ஹாக்கியில் எப்படியாவது ஒரு பதக்கம் கிடைத்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஹாக்கியில் நாம் எப்போது தடுமாற தொடங்கினோமோ, அதிலிருந்து மற்ற ஒலிம்பிக்கிலும் இந்தியா தடுமாறத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, July 23, 2024, 19:25 [IST]
Other articles published on Jul 23, 2024
English summary
Olympic India achievements - India never came back empty Handed since 1996 olympics ஒலிம்பிக் -1984 முதல் 12 ஆண்டுகள் இந்தியாவுக்கு சோக காலம்.. 1996-க்கு பின் மாறிய வரலாறு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+