Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் meme -ஒரு பதக்கத்துடன் இந்தியாவை முந்திய பாகிஸ்தான்.. நீங்க SSLC பெயில், நான் 8th Pass

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஐந்து பதக்கம் வென்று பட்டியலில் 63 வது இடத்தை பிடித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி ஒரு தங்கப் பதக்கம் வென்று 53வது இடத்தை பிடித்திருக்கிறது. இது எவ்வாறு சாத்தியம் என்று புலம்பி வருகிறார்கள். அவர்களுக்கான விளக்கம் இதோ!

இதனை கிண்டல் செய்யும் விதமாக கவுண்டமணி செந்தில் படத்தில் யார் அதிகம் படித்திருக்கிறார்கள் என்ற ஒரு காட்சி வரும். அதில் கவுண்டமணி தாம் எஸ் எஸ் எல் சி படித்து பெயில் ஆகி இருப்பதாகவும், நீ எட்டாவது தான் படித்து இருப்பதாகவும் கூறுவார். இதனால் நான் தான் அதிகமாக படித்திருக்கிறேன் என்று சொல்வார்.

olympics 2024 neeraj chopra arshad nadeem 2024

இதற்கு பதில் அளிக்கும் செந்தில் இல்லை! இல்லை! நீங்கள் பெயிலாகி விட்டீர்கள். நான் பாஸ் ஆகிவிட்டேன். அதனால் நான் தான் படித்தவன் என்று கூறுவார். அதற்கு கவுண்டமணி, டேய்! நீ எட்டாவது தான் படித்திருக்கிறாய். நான் பத்தாவது படித்திருக்கிறேன் என்று கூறுவார். அதற்கு செந்தில் பாஸ் பெரிசா செயல் பெரிசா என்று கேட்பார். இதை மீமாக போட்டு தான் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதாவது நீங்கள் நூறு வெண்கல பதக்கம் வாங்கி இருந்தாலும் மற்ற நாடு ஒரு தங்கம் வாங்கி இருந்தால் தங்கத்திற்கு தான் அதிக மதிப்பு. இதனால் தான் இந்தியா 5 வெண்கல பதக்கம் வாங்கியும் பாகிஸ்தான் ஒரு தங்கம் வாங்கி இருப்பதால் அவர்கள் 53வது இடத்தில் இருக்கிறார்கள். இந்தியா மட்டும் ஒரு தங்கம் வாங்கி இருந்தால் கூட பதக்கப் பட்டியலில் எங்கேயோ சென்று இருக்கும். ஒலிம்பிக் தொடர்களில் பதக்கப் பட்டியல் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படாது.

எவ்வளவு தங்கம் வாங்கி இருக்கிறார்கள் எவ்வளவு வெள்ளி வாங்கி இருக்கிறார்கள் என்பதை வைத்து தான் கணக்கிடப்படும். இதனால் தான் தங்க பதக்கம் வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் போராடும். இந்தியாவுக்கு இம்முறை இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் நூலிழையில் இரண்டுமே தவறி இருக்கிறது.

Story first published: Friday, August 9, 2024, 12:59 [IST]
Other articles published on Aug 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+