ரியோ நகருக்கு வந்த ஜோதி... வீரர்கள் ஆரவாரம் : விழாக்கோலம் பூண்டது ஒலிம்பிக் கிராமம்
ரியோ: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ரியோ டி ஜெனிரோ நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை போட்டிகள் தொடங்க உள்ள
தொடக்க விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி பல்வேறு நாடுகள் வழியாக ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தது.ஒலிம்பிக் ஜோதியை கண்டதும் விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் ஆரவாரக் குரல் எழுப்பினர்
31வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நாளை கோலாகலமாக துவங்க உள்ளது. வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த சர்வதேச விளையாட்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக 207 நாடுகளில் இருந்து, 11,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ரியோ நகரில் கூடியுள்ளனர்.
பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில், நாளை 31வது ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. தென்னமெரிக்க மண்ணை ஒலிம்பிக் போட்டி மிதிப்பது இதுதான் முதன்முறை.

ரியோ ஒலிம்பிக்
உலகின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைக் கடும் போட்டிக்கு இடையே பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் ஒலிம்பிக் போட்டிகளை பிரேசில் நடத்தப் போகிறது.

ஒலிம்பிக் ஜோதி
தொடக்க விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி பல்வேறு நாடுகள் வழியாக ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தது. இருபுறங்களிலும் கூடியிருந்த ரசிகர்கள் ஒலிம்பிக் ஜோதியை கண்டதும் ஆரவாரக் குரல் எழுப்பினர்.

தீப ஓட்ட வரலாறு
1928, ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஒலிம்பிக் சின்னங்களில் ஒன்றாக ஒலிம்பிக் சுடர் கருதப்படுகிறது. இதற்கான தீப ஓட்டம் 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது தொடங்கியது.

அணையாத ஜோதி
ஒலிம்பிக் தீபம், பண்டைய ஒலிம்பியாவில் புறப்பட்டு உலகம் முழுவதும் வலம்வந்து கடைசியாகப் போட்டி நடைபெறும் நாட்டை அடைகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை அறிவிக்கும் முதல் அம்சம், ஒலிம்பிக் தீப ஓட்டம். இந்தத் தீபம் ஏற்றப்பட்டது முதல் போட்டிகள் முடியும்வரை எங்கும் தடைபடாமல், அணைக்கப்படாமல் வைக்கப்படுகிறது

ரியோவில் விழாக்கோலம்
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் மேற்கொண்ட தீவிர பயிற்சிக்கு பின்னர் ரியோ டி ஜெனிரோவிற்கு சென்றுள்ளனர். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வான வேடிக்கை
ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் மரக்காணா ஸ்டோடியத்தில் நடைபெற்ற கண்கவர் வான வேடிக்கை ஒத்திகையை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

இந்திய வீரர்கள்
இந்தியா தடகளம், ஹாக்கி, டென்னிஸ், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல் உள்ளிட்ட 13 வகையான விளையாட்டுகளில் போட்டியிடுகிறது. இதற்காக 118 வீரர் மற்றும் வீராங்களைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா, இம்முறை அதற்கும் கூடுதலான பதக்கங்களை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications