Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் கோல்ப்.. பெண்கள் ஆட்டத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியாவின் அதிதி.. தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கோல்ப் ஆட்டத்தில் கடைசி ரவுண்டில் இந்தியாவின் அதிதி அசோக் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார். கடைசி ரவுண்டில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இவர் இழந்தார்.

ஒலிம்பிக் கோல்ப் 2020 ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் திக்சா டிகார் ஏற்கனவே பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டார். இதனால் இந்தியர்களின் மொத்த எதிர்பார்ப்பும் தற்போது அதிதி மீது திரும்பியது.

ஒலிம்பிக் கோல்ப் ஆட்டத்தில் வெற்றியாளர் பொதுவாக ஸ்டிரோக் புள்ளிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவார். குறைவான ஸ்டிரோக் புள்ளிகளை பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

வெற்றியாளர்

வெற்றியாளர்

ஒரு குழிக்குள் எத்தனை ஸ்டிரோக்குளில் பந்தை ஒருவர் போடுகிறார் என்பதே ஸ்டிரோக் புள்ளி ஆகும். ஐந்து முறை பந்தை தட்டி ஒருவர் பந்தை குழிக்குள் போட்டால் அது 5 ஸ்டிரோக் புள்ளி. இதில் குறைவான ஸ்டிரோக் புள்ளி இருந்தால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். குறைவான ஸ்டிரோக் புள்ளி உள்ள நபருக்கு அதிக நெகட்டிவ் பார் பாயிண்ட் வழங்கப்படும்.

நெகட்டிவ் பார் பாயிண்ட்

நெகட்டிவ் பார் பாயிண்ட்

நெகட்டிவ் பார் பாயிண்ட் அதிகமாகவும் பாசிட்டிவ் பாயிண்ட் குறைவாகவும் உள்ளவர்கள் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் அதிதி அசோக் டோக்கியோ ஒலிம்பிக் கோல்ப் ஆட்டத்தில் கடைசி ரவுண்டில் ஆடி வருகிறார். அவர் இன்னும் இரண்டு முறை குழிகளுக்குள் பந்துகளை போட வேண்டும். இதற்கு அவர் எவ்வளவு ஸ்டிரோக் எடுக்கிறார் என்பதை பொறுத்தே அவரின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

எவ்வளவு

எவ்வளவு

நேற்று வரை நடந்து முடிந்த மூன்று சுற்றுகள் முடிவில் 67, 66, 68 ஸ்டிரோக் புள்ளிகளை அதிதி பெற்றுள்ளார். இவர் தான் அடிக்க வேண்டிய ஸ்டிரோக் புள்ளிகளை விட 15 ஸ்டிரோக் குறைவாக எடுத்துக்கொண்டார். இது மிக சிறப்பான ஆட்டம் ஆகும். இதனால் இவரின் நெகட்டிவ் பார் பாயிண்ட் 15 ஆக இருந்தது. மூன்று சுற்றுகள் முடிவில் 201 ஸ்டிரோக் புள்ளிகளை எடுத்தார்.

கடைசி

கடைசி

கடைசி சுற்றில் சொதப்பிய அதிதி 68 புள்ளிகள் பெற்றார். இதனால் மொத்தமாக 269 புள்ளிகள் மற்றும் நெகட்டிவ் பார் பாயிண்ட் 15 பெற்ற அதிதி ரேங்க் பட்டியலில் 4வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். முதல் மூன்று சுற்றுகளில் 3ம் இடத்திற்கு உள்ளே இருந்த அதிதி கடைசி சுற்றில் நான்காம் இடம் சென்று தோல்வி அடைந்தார்.

Story first published: Saturday, August 7, 2021, 12:45 [IST]
Other articles published on Aug 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+