Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் வில்வித்தை போட்டி.. இந்தியாவில் யாருக்கு என்ன ரேங்க்? அடுத்த போட்டி எப்போது?

டோக்கியோ: இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இன்று வில்வித்தை ரேங்க் போட்டியில் பங்கேற்றனர். இதையடுத்து இவர்களின் முழு வெற்றி விவரம் வெளியாகி உள்ளது.

ஒலிம்பிக் தொடரின் முதல் நாளான இன்று வில்வித்தை போட்டிகளின் முதல் சுற்றான ரேங்கிங் சுற்றுகள் நடைபெற்றது. காலையில் பெண்கள் குழுவிற்கும், அதன்பின் ஆண்கள் குழுவிற்கும் போட்டிகள் நடந்தது. இதில் இந்தியா சார்பாக தீபிகா குமாரி, அடானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Olympics 2020: All you need to know about Indian Men and Women Individual Archery ranking round

போட்டி முடிவுகள் பின்வருமாறு

இந்திய பெண்கள் வில்வித்தை : தீபிகா குமாரி மொத்தமாக 12 சுற்று முடிவில் 663 புள்ளிகளை பெற்றார். பெண்கள் ரேங்கிங் சுற்றில் இவர் 9வது இடத்தை பிடித்தார்.

அடுத்த மோதல்: ரேங்கிங் சுற்றில் 616 புள்ளிகளுடன் 56 இடம் பெற்ற பூட்டானின் கர்மா என்ற வீராங்கனையுடன் குழு சுற்றில் தீபிகா குமாரி மோதுவார். வரும் 27ம் தேதி இந்த போட்டி நடக்கும்.

இந்திய ஆண்கள் வில்வித்தை: இதில் 656 புள்ளிகளோடு பிரவீன் ஜாதவ் 31வது இடத்தில் ஆட்டத்தை முடித்தார். அடானு தாஸ் 633 புள்ளிகளுடன் 35வது இடத்தை பிடித்தார். 652 புள்ளிகளோடு தருண்தீப் ராய் 37வது இடத்திலும் உள்ளார். இவர்களுக்கு அடுத்த போட்டி விவரங்கள் பின் வெளியிடப்படும்.

இந்திய ஆண்கள் குழு வில்வித்தை: இந்திய ஆண்கள் வில்வித்தையில் குழுவாக இந்தியா 1305 மதிப்பெண் பெற்றது. இதில் தருண்தீப் 652 புள்ளிகளும், அடானு தாஸ் 653 புள்ளிகளும் பெற்றனர். 12 அணிகள் கொண்ட குழுவில் இந்தியா 9வது இடம் பிடித்தது

இந்திய கலப்பு குழு வில்வித்தை: இதில் இந்தியா 1319 புள்ளிகள் பெற்றது. 29 அணிகள் கொண்ட குழுவில் இந்தியா 9வது இடம் பிடித்துள்ளது. இதில் தீபிகா குமார் 663 புள்ளிகள், பிரவின் ஜாதவ் 656 புள்ளிகள் பெற்றார். இந்திய கலப்பு குழு அடுத்த போட்டியில் சீனா தைப்பையை எதிர்கொள்ள உள்ளது.

Story first published: Friday, July 23, 2021, 14:07 [IST]
Other articles published on Jul 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+