Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி!

டோக்கியோ: ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி அடைந்து உள்ளது.

ஒலிம்பிக் தொடரில் இந்தியா பல்வேறு பிரிவுகளில் ஏமாற்றம் அளித்து வருகிறது. முக்கியமாக துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளில் இந்திய வீரர்கள் மோசமாக ஆடி வருகிறார்கள்.

துடுப்பு படகு போட்டியில் மட்டும் இந்திய வீரர்கள் கொஞ்சம் நம்பிக்கை அளித்தனர். துடுப்பு படகு போட்டியில் கடந்த 3 நாட்களாக தகுதி போட்டிகள், முதல் சுற்று போட்டிகள், காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது.

வெற்றி

வெற்றி

இந்திய வீரர்கள் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் ஒலிம்பிக் துடுப்பு படகு இரட்டையர் காலிறுதி போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். இந்த போட்டியில் 6.51.36 நிமிடத்தில் தங்கள் சுற்றுகளை அரவிந்த் மற்றும் அர்ஜுன் நிறைவு செய்தனர். இதன் மூலம் செமி பைனல் துடுப்பு படகு போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

தோல்வி

தோல்வி

இதையடுத்து இன்று நடந்த செமி பைனல் போட்டியில் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் ஜோடி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி பைனலுக்கு செல்லும். ஆனால் இன்று அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் ஜோடி 6வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

வாய்ப்பு

வாய்ப்பு

அயர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், உக்ரைன், ஸ்பெயின் ஆகிய அணிகள் இருந்த குழுவில் இந்திய அணி இன்று ஆடியது. இதில் 6:24.41 நிமிடங்களில் இலக்கை அடைந்து இந்தியா 6வது இடத்தை மட்டுமே பிடித்தது. அயர்லாந்து 6:05.33, இத்தாலி 6:07.70, பெல்ஜியம் 6:13.07 நிமிடங்களில் இலக்கை அடைந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இறுதி போட்டி

இறுதி போட்டி

பாய்மர படகு போட்டியில் ஜூலை 30ம் தேதி இறுதிப்போட்டிகள் அனைத்து பிரிவிலும் நடக்க உள்ளது. பதக்கம் வெல்லும் இந்த போட்டிக்கு இந்திய வீரர்கள் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் தகுதி பெறவில்லை.

Story first published: Wednesday, July 28, 2021, 16:00 [IST]
Other articles published on Jul 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+