திரில் போட்டி.. தென்கொரிய வில்வித்தை ஜாம்வானையே வீழ்த்திய அட்டானு தாஸ்.. அடுத்த சுற்றுக்கு தகுதி!
டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இன்று இந்திய வீரர் அட்டானு தாஸ் சிறப்பாக ஆடினார். இவர் 1/16 சுற்றில் 6-5 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீரர் ஜென்க் ஓவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஒலிம்பிக் ஆண்கள் மற்றும் பெண்கள் தனிநபர் வில்வித்தை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ரேங்கிங் சுற்றுகளில் வீரர், வீராங்கனைகள் எடுத்த ரேங்க் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 64 வீரர்களின் ரேங்க் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில் 32 ஜோடிகளாக இவர்கள் பிரிக்கப்பட்டு நேருக்கு நேர் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

வெற்றி
இதில் 32 ஜோடி சுற்றில் இந்தியாவின் அட்டானு தாஸ் இன்று காலை வெற்றிபெற்றார். 6-4 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே வீரர் டெங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதனால் தென்கொரிய வீரர் ஜென்க் ஓவை எதிர்கொண்டார்.

மீண்டும் வெற்றி
இந்த நிலையில் தற்போது 1/16 சுற்றிலும் வெற்றிபெற்று அட்டானு தாஸ் அசத்தி உள்ளார். 1/16 சுற்றில் 6-5 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீரர் ஜென்க் ஓவை வீழ்த்தி வெற்றி பெற்றார். தென்கொரிய வீரர் ஜென்க் ஓ 2012 ஒலிம்பிக் சாம்பியன் ஆவார். பொதுவாக வில்வித்தை போட்டிகளில் தென் கொரிய வீரர்கள் மிகவும் வலுவானவர்கள்.

வலிமை
அதிலும் தென்கொரிய வீரர் ஜென்க் ஓ உலகின் டாப் வீரர்களில் ஒருவர். அவரையே வீழ்த்தி அட்டானு வெற்றிபெற்றுள்ளார். இதில் டை பிரேக்கர் வரை ஆட்டம் திரில்லாக நீண்டது. 5 சுற்றுகள் முடிவில் இரண்டு பேருமே தலா 5 புள்ளிகள் பெற்று இருந்தனர்.இதனால் கடைசி சூட் அவுட் போட்டி நடந்தது.

சூட் அவுட்
இதில் அட்டானு தாஸ் துல்லியமாக 10 புள்ளிகள் எடுத்தார். ஜென்க் ஓ 9 புள்ளிகள் எடுத்து தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் வென்றதன் மூலம் அட்டானு தாஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இது 16 பேர் மொத்தம் எட்டு ஜோடிகளாக மோதும் சுற்று ஆகும். இதில் வெல்லும் பட்சத்தில் அட்டானு தாஸ் எட்டு பேர் மோதும் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைவார்.


Click it and Unblock the Notifications