Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் வில்வித்தை போட்டி.. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அட்டானு தாஸ்.. 6-4 புள்ளி கணக்கில் வெற்றி!

டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அட்டானு தாஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். 6-4 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே வீரர் டெங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் தொடரின் வில்வித்தை குழு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. வில்வித்தை குழு போட்டிகளில் இந்திய அணி சரியாக ஆடாத நிலையில் நேற்று தனிநபர் வில்வித்தை போட்டியிலும் தருண்தீப் ராய் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஆண்கள் வில்வித்தை 1/32 பிரிவில் வெற்றிபெற்ற தருண்தீப், 1/16 பிரிவு ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

அட்டானு தாஸ்

அட்டானு தாஸ்

இந்த நிலையில் இன்று ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தின் 1/32 பிரிவில் இந்தியாவின் அட்டானு தாஸ் சீன தைபே வீரர் டெங்கை எதிர்கொண்டார். ஆண்கள் வில்வித்தை ரேங்கிங் சுற்று ஆட்டத்தில் அடானு தாஸ் 633 புள்ளிகளுடன் 35வது இடத்தை பிடித்தார்

போட்டி

போட்டி

இதனால் அவருக்கும் 29வது இடம் பிடித்த சீன தைபே வீரர் டெங்கிற்கும் இன்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இரண்டு வீரர்களும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்த இறுதி வரை போட்டி விறுவிறுப்பாக சென்றது. இதில் மொத்தம் 5 சுற்று நடந்தது. ஒவ்வொரு சுற்றுக்கு மூன்று முறையை அம்புகளை எய்த வேண்டும்.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

இதில் முதல் சுற்றை 27-26 என்ற கணக்கில் அட்டானு தாஸ் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றை டெங் 28-27 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். பின்னர் மூன்றாவது சுற்றை 28-26 என்ற கணக்கில் அட்டானு தாஸ் கைப்பற்றினார். நான்காவது சுற்று மீண்டும் டெங் 28-27என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.

Recommended Video

Tokyo Olympics- ல் Racism தொடர்பான கருத்து.. Germany அதிகாரிக்கு எழுந்த எதிர்ப்பு
வெற்றி

வெற்றி

பின்னர் கடைசி சுற்றை 28-26 என்ற கணக்கில் அட்டானு தாஸ் கைப்பற்றினார். இதன் மூலம் 6-4 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே வீரர் டெங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 1/32 பிரிவில் வெற்றிபெற்ற அட்டானு தாஸ் அடுத்த சுற்றில் கொரிய வீரர் ஹாஜி ஹைங்கை எதிர்கொள்கிறார்.

Story first published: Thursday, July 29, 2021, 18:56 [IST]
Other articles published on Jul 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+