Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி கட்டத்தில் மாற்றிய கோல்ப் ஆட்டம்.. நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அதிதி.. எப்படி நடந்தது?

டோக்கியோ: வெண்கல பதக்கமாவது வெல்வார் என்று கடைசி நொடி வரை எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் அதிதி அசோக் பதக்கம் எதையும் வெல்லாமல் கோல்ப் ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

2020 கோல் ஒலிம்பிக் ஆட்டங்கள் முடிவிற்கு வந்துள்ளது. எதிர்பார்த்தபடியே அமெரிக்காவின் நெல்லி கோர்டா தங்கம் வென்றுள்ளார். தொடக்கத்தில் நெல்லிக்கு மிகவும் சவாலான போட்டியாளராக இந்தியாவின் அதிதி அசோக் திகழ்ந்தார்.

ஆனால் கடைசி சுற்றில், கடைசி இரண்டு குழிகளில் பந்துகளை போடுவதில் சொதப்பிய அதிதி அசோக் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

பெற்ற புள்ளிகள்

பெற்ற புள்ளிகள்

அதிதி அசோக் இந்த ஆட்டத்தில் நன்றாக தொடக்கம் கொடுத்து இருந்தார். முதல் ரவுண்டு முடிவில் 67 புள்ளிகள் பெற்று பெரிய அளவில் நம்பிக்கை அளித்தார். இரண்டாவது சுற்றில் இன்னும் சிறப்பாக ஆடி 66 புள்ளிகள் பெற்றார். கோல்ப் ஆட்டத்தில் குறைவான ஸ்டிரோக் புள்ளிகள் உள்ள நபர்கள் மட்டுமே வெற்றியாளராக பார்க்கப்படுவார்கள் .

வெற்றி

வெற்றி

இதனால் இரண்டாவது சுற்றுக்கு பின் அதிதி மீதான கவனம் அதிகரித்தது. அதேபோல் மூன்றாவது சுற்று முடிவிலும் 68 புள்ளிகள் பெற்றார். மூன்றாவது சுற்றில் அதிதி கொஞ்சம் சறுக்கினாலும் அவரின் பார் புள்ளிகள் -15 என்ற அளவிலேயே இருந்தது. இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த அதிதி எப்படியாவது தனது இடத்தை தக்க வைத்து வெண்கலம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி நிமிடம்

கடைசி நிமிடம்

கடைசி ரவுண்டில் 16 குழிகளில் அதிதி பந்துகளை போட வேண்டும். 14 குழிகளில் பந்துகளை போடும் வரை அவர் சிறப்பாகவே ஆடி வந்தார். அது வரை அதிதி மூன்றாவது இடத்திலேயே இருந்தார். ஆனால் கடைசி இரண்டு குழிகளில் அவர் பந்துகளை போடும் முன் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரம் தடை பட்டது.

மீண்டும்

மீண்டும்

மீண்டும் மழைக்கு பின் ஆட்டம் தொடங்கிய போது அதிதி சரிவை சந்தித்தார். கடைசி இரண்டு குழிகளில் பந்தை போடுவதற்கு ஸ்டிரோக் அதிகமாக எடுத்துக் கொண்டார். நியூசிலாந்து லிடியா கடைசி இரண்டு குழிகளில் குறைவான ஸ்டிரோக் மூலம் பந்தை போட்டு அசத்தினார். இதனால் கடைசி கட்டத்தில் ஆட்டம் மாறியது.

ஆட்டம் மாறியது

ஆட்டம் மாறியது

கடைசி கட்டத்தில் நியூசிலாந்தின் லிடியா -16 பார் புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் வந்தார். ஆனால் -15 பார் புள்ளிகள் பெற்று இருந்த அதிதி 4வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தார். கடைசி கட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் காரணமாக அதிதி தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. -15 பார் புள்ளிகளை பெற்ற அதிதி 67, 66, 68, 68 ஸ்டிரோக் புள்ளிகள் மூலம் 269 புள்ளிகள் எடுத்து தோல்வி அடைந்தார்.

முதல் மூன்று இடங்கள்

முதல் மூன்று இடங்கள்

இன்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர் விவரம்

தங்கம் : அமெரிக்காவின் நெல்லி: -17 பார் புள்ளிகள், ஸ்டிரோக் புள்ளிகள் 67, 62 , 69, 69, மொத்தம் 267

வெள்ளி : ஜப்பானின் மோனே : -16 பார் புள்ளிகள், ஸ்டிரோக் புள்ளிகள் 70, 65, 68, 65 மொத்தம் 268

வெண்கலம் : நியூசிலாந்தின் லிடியா : -16 பார் புள்ளிகள், ஸ்டிரோக் புள்ளிகள் 70, 67, 66, 65, மொத்தம் 268

Story first published: Saturday, August 7, 2021, 12:40 [IST]
Other articles published on Aug 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+