ஒலிம்பிக் தடகளம்.. 3000மீ Steeplechase தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் தோல்வி
டோக்கியோ: ஒலிம்பிக் தடகளம் 2020 போட்டியில் இன்று ஆண்கள் தடைதாண்டும் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஒலிம்பிக் 2020 தொடரின் தடகள போட்டிகள் இன்று தொடங்கி உள்ளன. Steeplechase எனப்படும் தடை தாண்டும் ஓட்டம் இன்று நடைபெற்றது. 3000 மீ தடை தாண்டும் ஓட்டம் ஆகும் இது.

Steeplechase ஓட்டத்தில் 28 தடைகளை தாண்டி ஒரு வீரர் ஓட வேண்டும். அதோடு 7 முறை குறைந்த ஆழம் கொண்ட நீர் பகுதியில் தாவ வேண்டும். மிகவும் கடினமான தடை தாண்டும் போட்டி முறையாகும் இது.
இதில் இந்தியா சார்பாக அவினாஷ் முகுந்த் தேர்வாகி இருந்தார். இன்று இதற்கான தகுதி சுற்று ஆட்டம் 3 குழுக்களாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 4 இடங்களுக்குள் வரும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
ஆனால் இன்று நடந்த ஆட்டத்தில் இரண்டாவது குழுவில் பங்கேற்ற அவினாஷ் முகுந்த் 7வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். 8:18.12 நிமிடத்தில் இலக்கை அடைந்து அவினாஷ் முகுந்த் தேசிய ரெக்கார்ட் படைத்தார். இது இவரின் தனிப்பட்ட ரெக்கார்ட் மற்றும் இந்திய ரெக்கார்ட் ஆகும்.
ஆனாலும் மொத்தமாக இவர் 4 இடங்களுக்குள் வரவில்லை என்பதால் இன்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.


Click it and Unblock the Notifications