Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்.. 3 முயற்சியிலும் சொதப்பிய இந்திய வீரர் ஷிவ்பால் சிங்.. மொத்தமாக வெளியேற்றம்

டோக்கியோ: ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். தகுதி போட்டியில் தோல்வி அடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக ஷிவ்பால் சிங் மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் 83.50மீ தூரத்திற்கு ஈட்டி எறியும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

தகுதி

தகுதி

யாருமே 83.50மீ தூரம் எட்டி எறியவில்லை என்றால் நேரடியாக முதல் 12 வீரர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதனால் எப்படியாவது 83.50மீ தூரத்திற்கு ஈட்டியை எறிய முயற்சி செய்ய வேண்டும். இதில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே மோசமாக இருந்தது. தொடக்கத்தில் இருந்தே இவர் திணறலாக ஆடி வந்தார்.

திணறல்

திணறல்

மொத்தம் ஈட்டி எறிதலில் மூன்று முறை வாய்ப்பு வழங்கப்படும். இதில் ஒருமுறையாவது 83.50மீ தூரத்தை கடந்த ஈட்டியை வீச வேண்டும். மூன்றிலும் தோல்வி அடைந்தால் மட்டுமே அந்த வீரர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழப்பார். இந்த நிலையில்தான் இன்று முதல் முயற்சியில் ஷிவ்பால் சிங் 76.40 மீட்டர் தூரம் வரை மட்டுமே ஈட்டி எறிந்தார்.

மோசம்

மோசம்

முதல் வாய்ப்பிலேயே மிக மோசமாக ஈட்டி எறிந்து கடுமையான ஏமாற்றம் அளித்தார். ஷிவ்பால் சிங் இதன்பின் இரண்டாம் முயற்சியிலும் இதைவிட மோசமாக ஈட்டி எறிந்தார். இரண்டாம் முயற்சியில் 74.80 மீட்டர் தூரம் வரை மட்டுமே இவரால் ஈட்டியை எறிய முடிந்தது. இதனால் கடைசி சுற்றில் எப்படியாவது 83.50மீ தூரத்தை கடந்த ஈட்டியை வீச வேண்டும் என்ற கட்டாயம் இவருக்கு இருந்தது.

மூன்றாவது சுற்று

மூன்றாவது சுற்று

இதன்பின் மூன்றாவது சுற்று ஆட்டத்திலும் ஷிவ்பால் ஏமாற்றம் அளித்தார். இதில் ஷிவ்பால் வெறும் 74.81 மீட்டர் தூரம் வரை மட்டுமே ஈட்டி எறிந்தார். மூன்று சுற்றிலும் சொதப்பிய காரணத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் தோல்வி அடைந்தார். இன்னொரு பக்கம் ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் மிக சிறப்பாக ஆடி இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார்.

வெற்றி

வெற்றி

மிக எளிதாக முதல் முயற்சியிலேயே நீரஜ் சோப்ரா பைனல் சென்றார். முதல்முறை ஈட்டி எறிந்து அதை 86.65 மீட்டர் தூரத்தில் வீசினார். இதனால் எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இவரின் குழுவில் நீரஜ்தான் முதலிடம் பிடித்தார். ஆனால் ஷிவ்பால் தனது குழுவில் மிகவும் பின்தங்கி 12வது இடம் பிடித்தார். இன்று இவரின் ஆட்டம் மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

பெண்கள்

பெண்கள்

முன்னதாக ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி தோல்வி அடைந்து வெளியேறினார். நேற்று ஒலிம்பிக் 2020 தொடரின் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெற்றது. இதில் 63.00 புள்ளிகளுக்கு அதிகம் எடுக்கும் வீராங்கனைகள் அல்லது முதல் 12 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

Story first published: Wednesday, August 4, 2021, 11:43 [IST]
Other articles published on Aug 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+