Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் தடகளத்திலும் தொடரும் ஏமாற்றம்.. 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜெபீர் தோல்வி!

டோக்கியோ: ஒலிம்பிக் 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜெபீர் மதாரி பள்ளியாலில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா தொடர்ந்து அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்து வருகிறது. வில்வித்தை குழு போட்டி, துப்பாக்கி சுடுதல், பெண்கள் ஹாக்கி, மகளிர் இரட்டையர் டென்னிஸ், டேபிள் டென்னிஸ் என்று தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் இந்தியா அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்து வருகிறது.

Olympics 2020 Athletics: Jabir Madari Pillyalil loses in 4000 m Hurdle qualifier round

இதுவரை பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் மட்டுமே வெள்ளிப்பதக்கம் வாங்கி இருக்கிறார். இந்தியாவில் வேறு யாரும் பதக்கம் வாங்கவில்லை. இந்த நிலையில் இன்று ஒலிம்பிக் தடகள போட்டிகளையும் இந்தியா தோல்வியோடு தொடங்கி உள்ளது.

ஒலிம்பிக் தடகளம் 2020 போட்டியில் இன்று ஆண்கள் தடைதாண்டும் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் தோல்வி அடைந்து வெளியேறினார். இதையடுத்து ஒலிம்பிக் 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜெபீர் மதாரி பள்ளியாலில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

ஆண்கள் தகுதி சுற்று பிரிவில் 7வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். முதல் 4 இடங்களை பிடிக்கும் வீரர்களே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இன்று இவரின் ரியாக்சன் டைம் 0.167 ஆகும். ஆனாலும் மொத்தமாக 7வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்.

Story first published: Friday, July 30, 2021, 16:08 [IST]
Other articles published on Jul 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+