Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஆர்மிகாரர்" சதிஷ் குமார்.. ஆண்கள் பாக்சிங்கில் இந்தியாவின் ஒரே நம்பிக்கை.. எகிறும் எதிர்பார்ப்பு!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் ஆண்கள் பாக்சிங்கில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக பாக்ஸர் சதீஷ் குமார் உருவெடுத்துள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்து வருகிறது. வில்வித்தை போட்டியில் மொத்தமாக இந்தியா ஒரு பதக்கம் கூட வாங்காமல் வெளியேறிவிட்டது.

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தீபிகா குமார், அட்டானு தாஸ் இரண்டு பேருமே பதக்கங்களை வெல்லவில்லை. வில்வித்தை போட்டியில் தொடர்ந்து தென் கொரியாவும், சீனாவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியா

இந்தியா

வில்வித்தையில் ஒரு பக்கம் சொதப்பிய நிலையில் துப்பாக்கி சுடுதலிலும் இந்தியா பெரிதாக ஜொலிக்கவில்லை. அதேபோல் பெண்கள் பாக்சிங்கிலும் மேரி கோம், பூஜா ராணு தோல்வி அடைந்து வெளியேறிவிட்டனர். இதனால் பெண்கள் பிரிவில் தற்போது ஒரே நம்பிக்கையாக லோவ்லினா இருக்கிறார்.

லோவ்லினா

லோவ்லினா

பெண்கள் பிரிவில் 69 கிலோ எடை பிரிவில் லோவ்லினா அரையிறுதிக்கு சென்று உள்ளார். இதனால் அவர் கண்டிப்பாக ஒரு பதக்கம் வெல்வது உறுதியாகி உள்ளது. ஆனால் ஆண்கள் பாக்சிங்கில் இந்திய வீரர்கள் மிக மோசமாக சொதப்பி உள்ளனர். இந்தியாவின் சதிஷ் குமார் இன்று காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஆடுகிறார்.

ஆட்டம்

ஆட்டம்

உலகின் நம்பர் ஒன் வீரரான உஸ்பெக்கிஸ்தானை சேர்த்த பகோதீர் ஜலாலாவை சதிஷ் குமார் எதிர்கொள்கிறார். இந்தியாவிற்காக ஆடும் ஒரே சூப்பர் ஹெவிவெயிட் பிரிவு பாக்சிங் சதிஷ்தான். இவர் 91 கிலோ எடை பிரிவில் ஆடுகிறார். இவருக்கு கடந்த போட்டியில் உடலில் 7 இடங்களில் தையல் போடப்பட்டது. இதனால் இன்று ஆடுவாரா என்று கேள்வி எழுந்தது.

சோதனை

சோதனை

ஆனால் மருத்துவ சோதனைக்கு பின் சதிஷ் குமார் ஆடுவது உறுதியாகி உள்ளது.ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் 2 முறை வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார். உத்தர பிரதேசத்தை சிறந்த வீரர் ராணுவ வீரராக உள்ளார். முதலில் கபடி வீரராக இவர் இருந்தார். இந்த நிலையில் இவரின் ஆர்மி கோச் கொடுத்த ஊக்கம் காரணமாக தற்போது பாக்ஸராக உள்ளார்.

காமன்வெல்த்

காமன்வெல்த்

காமன்வெல்த் போட்டிகளில் இவர் வெள்ளி வென்று இருக்கிறார். ஆண்கள் பாக்சிங்கில் முக்கிய வீரர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர். இந்த தொடரில் இந்தியா அதிகம் நம்பிய அமித் பங்கால், மனிஷ் கவுசிக், விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஷ் சவுத்திரி ஆகிய எல்லோரும் தோல்வி அடைந்து வெளியேறிவிட்டனர். இதனால் ஆண்கள் பாக்சிங்கில் இன்று ஒரே நம்பிக்கையாக சதிஷ் குமார் இருக்கிறார்.

Story first published: Sunday, August 1, 2021, 13:18 [IST]
Other articles published on Aug 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+