"சார்பட்டா சதீஷ்".. ஆண்கள் பாக்சிங்கில் ஜமைக்கா வீரரை துவம்சம் செய்த சதீஷ் குமார்.. தரமான வெற்றி!
டோக்கியோ: ஆண்கள் பாக்சிங் +91 கிலோவில் இந்தியாவின் சதிஷ் குமார் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். ரிக்கார்டோவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சதிஷ் குமார் வெற்றி பெற்றார். இதன் மூலம் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Recommended Video
ஆண்கள் பாக்சிங் +91 கிலோ பிரிவில் இன்று 1/32 குழு ஆட்டம் நடைபெற்றது. 64 வீரர்கள் 32 குழுக்களாக பிரிந்து நேருக்கு நேர் ஆட்டத்தில் மோதினார்கள். இதில் வெற்றிபெறும் 32 வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
இதில் வெற்றிபெறுபவர்கள் 1/16 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இன்று இந்த போட்டியில் இந்தியா சார்பாக சதிஷ் குமார் யாதவ் கலந்து கொண்டார்.

இந்தியா
இந்தியாவின் சதிஷ் குமார் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுன் இடையிலான ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது. இதில் முதல் சுற்றிலேயே சதீஷ் குமார் கடுமையான ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றில் அனைத்து ஜட்ஜ்களிடம் இருந்தும் சதிஷ் குமார் தலா 10 புள்ளிகளை பெற்றார். முதல் சுற்றில் மொத்தமாக புள்ளிகளை பெற்று சதிஷ் குமார் அசத்தினார்.

5 புள்ளிகள்
சமீபத்தில் நடந்த எந்த பாக்சிங் போட்டியிலும் முதல் சுற்றிலேயே ஒரு வீரர் அனைத்து ஜட்ஜ்களிடம் இருந்தும் 10 புள்ளிகளை பெறவில்லை. அந்த அளவிற்கு இன்று சதீஷ் குமார் ஆட்டம் சிறப்பாக இருந்தது. முதல் சுற்றில் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுன் 44 புள்ளிகள் மட்டுமே பெற்றார்.

இரண்டாவது சுற்று
இதையடுத்து இரண்டாவது சுற்றிலும் சதீஷ் குமாரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இரண்டாவது சுற்றில் 4 ஜட்ஜ்களிடம் இருந்து தலா 10 புள்ளிகளை பெற்றார். இன்னொரு ஜட்ஜிடம் இருந்து 9 புள்ளிகளை பெற்றார். 49 புள்ளிகளை சதீஷ் பெற ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுன் 46 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இரண்டாவது சுற்றிலேயே சதீஷ் குமார் வெற்றி உறுதியாகிவிட்டது.

வெற்றி
மூன்றாவது சுற்றிலும் 4 ஜட்ஜ்களிடம் இருந்து தலா 10 புள்ளிகளை பெற்றார். இன்னொரு ஜட்ஜிடம் இருந்து 9 புள்ளிகளை பெற்று சதீஷ் குமார் மொத்தமாக 49 புள்ளிகள் எடுத்தார். இதிலும் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுன் 44 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதனால் மொத்தமாக ரிக்கார்டோவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சதிஷ் குமார் வெற்றி பெற்றார். இதன் மூலம் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications