For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேரிகோமை தொடர்ந்து.. பாக்சிங்கில் ஏமாற்றம் அளித்த இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித்.. படுதோல்வி!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 பெண்கள் லைட் வெயிட் பாக்சிங்கில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரில் பாக்சிங் தொடரில் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை இந்தியா சந்தித்து வருகிறது. நேற்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மேரி கோம் தோல்வி அடைந்தார்.

கொலம்பியாவின் விக்டோரியாவிடம் 3:2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இவருக்கு புள்ளிகள் கொடுக்கப்பட்ட விதம் நேற்று பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இன்று

இன்று

இந்த நிலையில் இன்று ஒலிம்பிக் 2020 பெண்கள் லைட் வெயிட் பாக்சிங்கில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கார் கலந்து கொண்டார். இன்று நடந்தது 16வது பிரிவு ஆட்டம் ஆகும். இதில் வென்றால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சிம்ரன்ஜித் தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் தோல்வி

ஆனால் தோல்வி

இன்று தாய்லாந்து வீராங்கனை சுடாபார்னை சிம்ரன்ஜித் எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் இருந்தே சிம்ரன்ஜித் திணறினார். சுடாபார்ன் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் தொடக்கத்தில் இருந்தே போட்டியில் கடுமையான ஆதிக்கம் செலுத்தினார்.

செட்கள்

செட்கள்

சிம்ரன்ஜித் ஒரு நடுவரிடம் இருந்து கூட 10 புள்ளிகளை மூன்று சுற்றிலும் வாங்கவில்லை. மூன்று சுற்றிலும் இவர் 9 புள்ளிகளை மட்டுமே அனைத்து நடுவரிடம் இருந்தும் பெற்றார். இன்னொரு பக்கம் சுடாபார்ன் அனைத்து சுற்றிலும், 5 நடுவர்களிடம் இருந்தும் 10 புள்ளிகளை பெற்றார்.

வெற்றி

வெற்றி

மொத்தமாக ஆட்ட நேர முடிவில் சுடாபார்ன் 150 மதிப்பெண்களை பெற்றார். ஆனால் சிம்ரன்ஜித் 135 மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். இதனால் தாய்லாந்து வீராங்கனை சுடாபார்னிடம் 5:0 என்ற புள்ளி கணக்கில் சிம்ரன்ஜித் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

Story first published: Friday, July 30, 2021, 16:09 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
Olympics 2020 Boxing: Thailand's Sudaporn Seesondee beats India's Simranjit Kaur Baatth by 5-0 in an easy match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+