Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் 2020 வில்வித்தை.. காலிறுதியில் அதிர்ச்சி.. தென் கொரியாவின் சானிடம் வீழ்ந்த தீபிகா குமாரி

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 வில்வித்தை போட்டியின் பெண்கள் பிரிவில் தென் கொரியாவின் ஆன் சானிடம் தீபிகா குமாரி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

ஒலிம்பிக் ஆண்கள் மற்றும் பெண்கள் தனிநபர் வில்வித்தை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.அட்டானு தாஸ் ஆண்கள் பிரிவில் ஏற்கனவே காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டார்.

 Olympics 2020: Deepika Kumari loses quarter final against South Korea An San

இந்த நிலையில் இன்று பெண்கள் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றும், பின் காலிறுதி போட்டிகளும் நடந்தது. இதில் தீபிகா எளிதாக தென்கொரிய வீரர் ஜென்க் ஓவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 6-5 என்ற புள்ளி கணக்கில் தீபிகா வென்றார். இதன் மூலம் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதனால் இவரின் காலிறுதி ஆட்டம் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெண்கள் பிரிவில் தென் கொரியாவின் ஆன் சானிடம் தீபிகா குமாரி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். 6-0 புள்ளிகள் கணக்கில் காலிறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார்.

30-27, 26-24, 26-24 என்ற புள்ளிகளை பெற்று மொத்தமாக 6-0 புள்ளிகள் கணக்கில் காலிறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்டு தீபிகா குமாரி வெளியேறி உள்ளார்.

Story first published: Friday, July 30, 2021, 12:09 [IST]
Other articles published on Jul 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+