ஒலிம்பிக் பெண்கள் வில்வித்தை.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் தீபிகா குமாரி.. திரில் ஆட்டம்!
டோக்கியோ: ஒலிம்பிக் 2020 பெண்கள் வில்வித்தை போட்டியில் இன்று இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஒலிம்பிக் ஆண்கள் மற்றும் பெண்கள் தனிநபர் வில்வித்தை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
ஏற்கனவே ரேங்கிங் சுற்றுகளில் வீரர், வீராங்கனைகள் எடுத்த ரேங்க் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அட்டானு தாஸ் சிறப்பாக ஆடினார்.

ஆட்டம்
இவர் 1/16 சுற்றில் 6-5 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீரர் ஜென்க் ஓவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் இன்று பெண்கள் பிரிவில் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக தீபிகா குமாரி ஆடினார்.

முதல் செட்
ஏற்கனவே தீபிகா குமாரி 1/32 பிரிவில் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றார். இதையடுத்து இன்று 1/16 ஆட்டம் நடந்தது. இதில் 32 பேர் 16 ஜோடிகளாக பிரிந்து மோதுவார்கள். இதில் தீபிகா குமாரி ரஷ்யாவின் க்சென்னியா பேரசோவாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பு
இதில் முதல் சுற்றை 28-25 என்ற புள்ளி கணக்கில் தீபிகா கைப்பற்றினார். அதன்பின் இரண்டாவது சுற்றை 26-27 என்ற புள்ளி கணக்கில் பெர்கோவா கைப்பற்றினார். பின்னர் மீண்டும் மூன்றாவது சுற்றை 28-27 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரி கைப்பற்றினார். இந்த நிலையில் நான்காவது சுற்று 26-26 என்ற புள்ளி கணக்கில் டை ஆனது.

வெற்றி
இதையடுத்து ஐந்தாவது சுற்றை 28-25 என்ற புள்ளி கணக்கில் தீபிகா கைப்பற்றினார். இதனால் ஆட்டம் டைபிரேக்கர் வரை விறுவிறுப்பாக சென்றது. டை பிரேக்கரில் தீபிகா 10 புள்ளிகள் எடுக்க பெர்கோவா வெறும் 7 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். இதனால் தீபிகா எளிதாக 6-5 என்ற புள்ளி கணக்கில் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.


Click it and Unblock the Notifications