ஒலிம்பிக் கோல்ப்.. ஏமாற்றம் அளித்த இந்தியாவின் திக்சா டகார்.. பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்
டோக்கியோ: இந்திய வீராங்கனை திக்சா டகார் ஒலிம்பிக் கோல்ப் ஆட்டத்தில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
ஒலிம்பிக் கோல்ப் 2020 தொடரில் இந்திய வீராங்கனை திக்சா டகாரின் நான்கு சுற்றுகள் முடிவிற்கு வந்துள்ளது. நான்கு சுற்று முடிவில் 290 ஸ்டிரோக் புள்ளிகளை திக்சா பெற்றுள்ளார். ஒலிம்பிக் கோல்ப் போட்டி மொத்தம் 4 சுற்றுகளாக நடக்கும்.
ஒவ்வொரு சுற்றுக்கு மொத்தம் 18 துளைகளில் பந்துகளை போட வேண்டும். மொத்தமாக 72 துளைகளில் பந்துகளை போட வேண்டும்.

குறைந்த ஸ்டிரோக்
இதில் குறைந்த ஸ்ட்ரோக் உள்ளவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார். அதாவது ஒரு பந்தை துளையில் போடுவதற்கு குறைவான ஸ்டிரோக்களை எடுத்துக்கொள்ளும் நபர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். கூடுதலாக ஸ்டிரோக்களை எடுத்துக்கொண்டால் கூடுதல் "பார்" புள்ளிகள் வழங்கப்படும். இந்த புள்ளிகள் ப்ளஸில் அதிகமாக இருந்தால் அந்த நபர் வெற்றிபெற வாய்ப்பு இல்லை.

திக்சா
அதே இந்த புள்ளிகள் மைனஸில் அதிகம் இருந்தால் அவர் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. இதில் இந்தியாவின் திக்சா டகார் அடிக்க வேண்டிய ஸ்டிரோக்குகளை விட கூடுதலாக 6 ஸ்டிரோக்குகளை திக்சா பெற்றுள்ளார். நான்கு சுற்றுகள் முடிவில் 76, 72, 72, 70 ஆகிய புள்ளிகளை பெற்றுள்ளார். மொத்தமாக 290 பூக்களை அவர் பெற்றுள்ளார்.

தோல்வி
இவர் மொத்தமாக 284 புள்ளிகளுக்குள் நான்கு சுற்றுகளை முடித்து இருக்க வேண்டும். ஆனால் இவர் கூடுதலாக 6 ஸ்டிரோக் எடுத்துக்கொண்டார். இதனால் இவர் ப்ளசில் புள்ளிகளை பெற்றார். இதனால் +6 புள்ளிகள் பெற்று பட்டியலில் திக்சா பின்தங்கினார். தற்போது புள்ளிகள் பட்டியலில் இவர் 50வது இடத்தில் உள்ளார்.

முடிந்தது
இவரின் அனைத்து சுற்றுகளும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் மற்ற வீராங்கனைகள் ஆட்டம் மீதம் உள்ளது. ஆனால் புள்ளிகள் அடிபப்டையில் திக்சா இனி முதல் மூன்று இடங்களுக்குள் வர வாய்ப்பே இல்லை. இதனால் கோல்ப் ஆட்டத்தில் இந்தியாவிற்காக திக்சா பதக்கம் வெல்ல வாய்ப்பு பறிபோய் உள்ளது.


Click it and Unblock the Notifications